பொது செய்தி

தமிழ்நாடு

இன்றும், நாளையும் வாக்காளர் சிறப்பு முகாம்

Added : நவ 21, 2020
Share
Advertisement
சென்னை:தமிழகத்தில் உள்ள, அனைத்து ஓட்டுச்சாவடிகளிலும், இன்றும், நாளையும், வாக்காளர் சிறப்பு முகாம் நடக்க உள்ளது.தமிழகத்தில், வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிக்காக, இம்மாதம், 16ம் தேதி, வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அன்று முதல், வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி நடந்து வருகிறது. பொதுமக்கள் நலன் கருதி, மாநிலத்தில் உள்ள, அனைத்து ஓட்டுச் சாவடிகளிலும், இன்றும்,

சென்னை:தமிழகத்தில் உள்ள, அனைத்து ஓட்டுச்சாவடிகளிலும், இன்றும், நாளையும், வாக்காளர் சிறப்பு முகாம் நடக்க உள்ளது.

தமிழகத்தில், வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிக்காக, இம்மாதம், 16ம் தேதி, வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அன்று முதல், வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி நடந்து வருகிறது. பொதுமக்கள் நலன் கருதி, மாநிலத்தில் உள்ள, அனைத்து ஓட்டுச் சாவடிகளிலும், இன்றும், நாளையும், வாக்காளர் சிறப்பு முகாம் நடக்க உள்ளது.

கொரோனா நோய் தடுப்பு விதிமுறைகளை பின்பற்றி, முகாம் நடைபெற உள்ளது. முகாமிற்கு வருவோர், முக கவசம் அணிந்திருக்க வேண்டும்; சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும்.பொதுமக்கள் முகாம் நடக்கும் இடங்களுக்கு சென்று, தங்கள் பெயர் வாக்காளர் பட்டியலில் உள்ளதா என, அறிந்து கொள்ளலாம்.வாக்காளர் பட்டியலில், பெயர் சேர்க்க, நீக்க, திருத்தம் செய்ய, முகவரி மாற்ற விரும்புவோர், அங்கேயே விண்ணப்பங்கள் பெற்று, பூர்த்தி செய்து வழங்கலாம்.

வாக்காளர் பட்டியலில், பெயர் சேர்க்க விரும்புவோர், முகவரி சான்றாக, பாஸ்போர்ட், ஓட்டுனர் உரிமம், வங்கி புத்தகம், கிசான் பத்திரம், தபால் அலுவலக கணக்கு புத்தகம்,குடும்ப அட்டை, வருமான வரி ஒப்படைப்பு சான்று, வாடகை ஒப்பந்தம், குடிநீர், தொலைபேசி, மின் கட்டணம், காஸ் இணைப்பு ரசீது, சமீபத்தில் வந்த தபால் போன்றவற்றில், ஏதேனும் ஒன்றின் நகலை வழங்கலாம்.

மேலும், பிறப்பு சான்றிதழ், ஐந்து, எட்டு, 10ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் போன்றவற்றை, பிறந்த தேதி ஆவணமாக அளிக்கலாம்.வரும், 2021 ஜன., ௧ல், 18 வயது பூர்த்தியாவோரும், பெயர் சேர்க்க விண்ணப்பிக்கலாம். விண்ணப்பத்தில் தங்களின் வண்ண புகைப்படத்தை ஒட்ட வேண்டும்.ஆன்லைனில் விண்ணப்பிக்க விரும்புவோர், www.nvsp.in; https://voterportal.eci.gov.in
என்ற இணையதளத்திலும், VOTER HELP LINE என்ற, மொபைல் ஆப் வழியாகவும் விண்ணப்பிக்கலாம்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X