பொது செய்தி

தமிழ்நாடு

செய்தி சில வரிகளில்...

Added : நவ 21, 2020
Share
Advertisement
குழந்தைகளுக்கு உதவிதிருப்போரூர்: திருப்போரூர் அடுத்த, குன்னப்பட்டு இருளர் பகுதியில், 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. இங்கு, 50க்கும் மேற்பட்ட பள்ளி குழந்தைகள் உள்ளனர்.அங்குள்ள குழந்தைகளை மகிழ்விக்க, 'ஹேண்ட் இன் ஹேண்ட்' தொண்டு நிறுவனம் மற்றும் 'சைல்டு லைன்' சார்பில், சர்வதேச குழந்தைகள் தின விழா, நேற்று நடந்தது.சிறப்பு அழைப்பாளராக, காஞ்சிபுரம், -செங்கல்பட்டு

குழந்தைகளுக்கு உதவிதிருப்போரூர்: திருப்போரூர் அடுத்த, குன்னப்பட்டு இருளர் பகுதியில், 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. இங்கு, 50க்கும் மேற்பட்ட பள்ளி குழந்தைகள் உள்ளனர்.அங்குள்ள குழந்தைகளை மகிழ்விக்க, 'ஹேண்ட் இன் ஹேண்ட்' தொண்டு நிறுவனம் மற்றும் 'சைல்டு லைன்' சார்பில், சர்வதேச குழந்தைகள் தின விழா, நேற்று நடந்தது.சிறப்பு அழைப்பாளராக, காஞ்சிபுரம், -செங்கல்பட்டு மாவட்ட குழந்தைகள் நல குழும தலைவர் ராமச்சந்திரன் பங்கேற்று, குழந்தைகளுக்கு நோட்டு, புத்தகம், எழுதுகோல் போன்ற கல்வி உபகரணங்கள் மற்றும் இனிப்பு, முக கவசங்களை வழங்கினார்.கிராம வளர்ச்சி திட்ட பயிற்சிஉத்திரமேரூர்: உத்திரமேரூர் ஏ.பி.சத்திரத்தில், உள்ள வட்டார வளர்ச்சி அலுவலக கூட்டரங்கில், கிராம வளர்ச்சி திட்ட பயிற்சி முகாம் நடந்தது.உத்திரமேரூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் முத்துகுமார், சீனிவாசன் ஆகியோர் தலைமை வகித்தனர்.கிராம ஊரக வளர்ச்சி திட்டத்தின் முக்கியத்துவம், மக்கள் திட்டமிடல் இயக்கம் சார்பில், கிராமங்களின் தேவைகளை மக்களே திட்டமிடுதல், மரம் வளர்ப்பு, பிளாஸ்டிக் ஒழிப்பு, கிராம சபை கூட்டத்தின் முக்கியத்துவம் குறித்து, கிராம வளர்ச்சித் திட்ட மாவட்ட முதன்மைப் பயிற்றுனர் சித்ரா, சமுதாய பயிற்றுனர் விமலா ஆகியோர் பயிற்சி அளித்தனர்.ஊராட்சி செயலர்கள், மகளிர் சுய உதவிக் குழு நிர்வாகிகள், கிராம வறுமை ஒழிப்பு சங்க நிர்வாகிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X