கோர்ட் செய்தி

தமிழ்நாடு

அரசியல்வாதிகள் ஏழை மாணவர்களை தத்தெடுக்கலாமே

Updated : நவ 22, 2020 | Added : நவ 21, 2020 | கருத்துகள் (10)
Share
Advertisement
மதுரை: அரசியல்வாதிகள், சினிமா பிரபலங்கள் ஏழை மாணவர்களை தத்தெடுத்து, அவர்களின் மருத்துவப் படிப்பு கல்விக் கட்டணத்தை ஏற்க முன்வர உயர்நீதிமன்ற மதுரைக் கிளை அறிவுறுத்தியது.திருநெல்வேலி வடக்கன்குளம் கிரகாம்பெல் தாக்கல் செய்த பொதுநல மனு:தொழில் படிப்பு சுயநிதி கல்லுாரிகளுக்கான கட்டணம் நிர்ணயிக்க குழு அமைக்கப்பட்டுள்ளது. இது அரசு ஒதுக்கீட்டின் கீழ் தனியார்
 அரசியல்வாதிகள், சினிமா பிரபலங்கள் ஏழை மாணவர்களை தத்தெடுக்கலாமே :தினமலர் செய்தி,உயர்நீதிமன்றம் அறிவுரை

மதுரை: அரசியல்வாதிகள், சினிமா பிரபலங்கள் ஏழை மாணவர்களை தத்தெடுத்து, அவர்களின் மருத்துவப் படிப்பு கல்விக் கட்டணத்தை ஏற்க முன்வர உயர்நீதிமன்ற மதுரைக் கிளை அறிவுறுத்தியது.

திருநெல்வேலி வடக்கன்குளம் கிரகாம்பெல் தாக்கல் செய்த பொதுநல மனு:தொழில் படிப்பு சுயநிதி கல்லுாரிகளுக்கான கட்டணம் நிர்ணயிக்க குழு அமைக்கப்பட்டுள்ளது. இது அரசு ஒதுக்கீட்டின் கீழ் தனியார் மருத்துவக் கல்லுாரிகளில் சேரும் மாணவர்களுக்கான கட்டணம் நிர்ணயித்துள்ளது. இத்தொகையை தற்போதைய பொருளாதார நெருக்கடியால் செலுத்த இயலாது.
மக்களிடம் கருத்துக் கேட்கவும், இயற்கை நீதியை பின்பற்றவும் குழு தவறிவிட்டது. குழு நிர்ணயித்த கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும். கொரோனா பாதிப்பு காலகட்டத்தை உணர்ந்து குறைந்தபட்ச கட்டணத்தை நிர்ணயிக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு கிரகாம்பெல் குறிப்பிட்டார்.

நீதிபதிகள் என்.கிருபாகரன், பி.புகழேந்தி அமர்வு: மருத்துவப் படிப்புகளில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீதம் உள்ஒதுக்கீட்டை உயர்ந்த நோக்கில் அரசு வழங்கியுள்ளது. பல தடைகளுக்குப் பின் மருத்துவக் கல்லுாரிகளில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இடம் கிடைக்கிறது. அவர்களால் கட்டணம் செலுத்த இயலாததால், படிப்பை பாதியில் கைவிடுவது வேதனையைத் தருகிறது.

'தினமலர்' நாளிதழில் வந்த செய்தி அடிப்படையில் ஒரு ஏழை மாணவரின் மருத்துவப் படிப்பிற்கு கட்டணம் செலுத்த மூத்த வழக்கறிஞர் வீரகதிரவன் முன்வந்துள்ளார். இதுபோல் பிற வழக்கறிஞர்கள், அரசியல் கட்சித் தலைவர்கள், மாவட்டச் செயலாளர்கள், சினிமா நடிகர்கள், இயக்குனர்கள், இசையமைப்பாளர்கள் ஏழை மாணவர்களை தத்தெடுத்து, அவர்களின் கல்விக் கட்டணத்தை ஏற்க முன்வர வேண்டும் என கருத்து வெளியிட்டனர்.

பின் நீதிபதிகள், 'ஏழை மாணவர்கள் மருத்துவக் கல்லுாரிகளில் கட்டணம் செலுத்த முடியாததால் படிப்பை பாதியில் கை விடுகின்றனர். இதைத் தவிர்க்க அவர்களுக்கு கட்டணம் செலுத்த மாற்று ஏற்பாடு செய்யும் திட்டம் உள்ளதா, அவர்கள் படிப்பை முடித்ததும் கிராமப்புறங்களில் பணிபுரிவதாக உத்தரவாதம் பெற்றால் என்ன என்பதற்கு அரசுத் தரப்பில் விபரம் பெற்று தெரிவிக்க வேண்டும். சுகாதாரத்துறை செயலாளருக்கு நோட்டீஸ் அனுப்பப்படுகிறது,' என உத்தரவிட்டு, நவ.,27 க்கு ஒத்திவைத்தனர்.


Advertisement




வாசகர் கருத்து (10)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
mothibapu - Prayagraj,இந்தியா
21-நவ-202017:35:27 IST Report Abuse
mothibapu பெரும்பாலும் தவறான வழியில் சம்பாதித்த பணமாக இருக்கும் அரசியல்வாதிகளிடம். அவர்களிடம் உதவி பெற்றால் அவற்றை பின்னாளில் ஐந்து மடங்காக வசூலித்துவிடுவார்கள். எனவே நல்லுள்ளம்படைத்த மக்களின் உதவி நன்று.
Rate this:
Cancel
Murugesan - Abu Dhabi,ஐக்கிய அரபு நாடுகள்
21-நவ-202015:56:35 IST Report Abuse
Murugesan அரசியவாதிகளை உதவச்சொல்வது மாணவர்களை சீரழிக்கும் வேலை , மக்களின் பணத்தை கொல்லியடித்து ஊழல் பணத்தில் சொகுசு வாழ்க்கை நடத்தும் அரசியவாதிகளிடம் பணஉதவி செய்ய சொல்லுவது எந்தவகை தர்மம், ஊழல் வாதிகளின் உதவிபெற்று படிப்பதற்கு பதில் நாலு இடத்தில் வேலை செய்து உண்டு வாழ்வது தான் தலை சிறந்தது அதைவிடுத்து அரசியவாதிகளின் காலை பிடித்து வாழ கோர்ட் சொல்லுவது நீதியை குழிதோண்டி புதைக்கும் செயல் , நேர்மையா ஓரு ரூபாய் நல்ல மனிதர்கள் கொடுக்கும் பணம் விலை மதிப்பற்றது,
Rate this:
Cancel
bigu -  ( Posted via: Dinamalar Android App )
21-நவ-202014:04:40 IST Report Abuse
bigu கலைஞரின் டிரஸ்ட் மூலம் நிறையமானவர்கள் கல்வி பயின்று வருகின்றனர்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X