பொது செய்தி

தமிழ்நாடு

இரு மாதங்களுக்கு பின் பெட்ரோல் விலை உயர்வு

Added : நவ 21, 2020
Share
Advertisement
சென்னை:தமிழகத்தில், இரு மாதங்களுக்கு பின், பெட்ரோல் விலை உயர்த்தப்பட்டது. பொதுத் துறையை சேர்ந்த இந்தியன் ஆயில், பாரத், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் எண்ணெய் நிறுவனங்கள், பெட்ரோல், டீசல் விலையை, தினமும் நிர்ணயம் செய்கின்றன.தமிழகத்தில், செப்டம்பர், 22ல் லிட்டர் பெட்ரோல், 84.14 ரூபாய்க்கு விற்றது. பின், அதன் விலை மாற்றப்படவில்லை. இந்நிலையில், 59 நாட்கள் முடிந்த நிலையில், நேற்று

சென்னை:தமிழகத்தில், இரு மாதங்களுக்கு பின், பெட்ரோல் விலை உயர்த்தப்பட்டது.

பொதுத் துறையை சேர்ந்த இந்தியன் ஆயில், பாரத், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் எண்ணெய் நிறுவனங்கள், பெட்ரோல், டீசல் விலையை, தினமும் நிர்ணயம் செய்கின்றன.தமிழகத்தில், செப்டம்பர், 22ல் லிட்டர் பெட்ரோல், 84.14 ரூபாய்க்கு விற்றது. பின், அதன் விலை மாற்றப்படவில்லை.

இந்நிலையில், 59 நாட்கள் முடிந்த நிலையில், நேற்று பெட்ரோல் விலை லிட்டருக்கு, 17 காசுகள் உயர்ந்து, 84.31 ரூபாய்க்கு விற்கப்பட்டது.அக்., 2ல், லிட்டர் டீசல் விலை, 75.95 ரூபாயாக இருந்தது. ஒன்றரை மாதங்களுக்கு மேலாக, டீசல் விலையும் மாற்றப்படாமல் இருந்த நிலையில், நேற்று, 22 காசுகள் உயர்ந்து, 76.17 ரூபாய்க்கு விற்கப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X