சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ஒரு மாதத்திலேயே உடைந்த சித்தமல்லி வரத்து கால்வாய்

Added : நவ 21, 2020
Share
Advertisement
உத்திரமேரூர் : மருத்துவான்பாடி ஊராட்சியில், கட்டுமான பணி முடிந்த ஒரு மாதத்திலேயே, மழை நீர் வரத்து கால்வாயில் விரிசல் ஏற்பட்டு, இடிந்து விழும் நிலையில் உள்ளது. உத்திரமேரூர் ஒன்றியம், மருத்துவான்பாடி ஊராட்சிக்கு உட்பட்ட சித்தமல்லி கிராமத்தில், மஹாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில், 14.18 லட்சம் ரூபாய் செலவில், செப்., 17ல் துவங்கியது.ஊரக வளர்ச்சி மற்றும்

உத்திரமேரூர் : மருத்துவான்பாடி ஊராட்சியில், கட்டுமான பணி முடிந்த ஒரு மாதத்திலேயே, மழை நீர் வரத்து கால்வாயில் விரிசல் ஏற்பட்டு, இடிந்து விழும் நிலையில் உள்ளது.

உத்திரமேரூர் ஒன்றியம், மருத்துவான்பாடி ஊராட்சிக்கு உட்பட்ட சித்தமல்லி கிராமத்தில், மஹாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில், 14.18 லட்சம் ரூபாய் செலவில், செப்., 17ல் துவங்கியது.ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறை சார்பில் நடந்த இப்பணி, அக்., 21ல் நிறைவு பெற்றதாக, பணி குறித்த விளம்பரப் பலகையில் குறிப்பிடப்பட்டுள்ளது.இப்பணி முடிந்து ஒரு மாதமே ஆன நிலையில், காஞ்சிபுரம் மாவட்டத்தில், கடந்த வாரம் பெய்த மழைக்கு, கால்வாயில் விரிசல் ஏற்பட்டு, இடிந்து விழும் நிலையில் உள்ளது.

இருநாள் மழைக்கே, கால்வாயில் விரிசல் ஏற்பட்டுள்ளதால், பருவமழை தீவிரமடைந்து, தொடர்ந்து கன மழை பெய்தால், கால்வாயின் உறுதித்தன்மை கேள்விக்குறியாகும்.எனவே, உத்திரமேரூர் ஒன்றியத்தில், மஹாத்மா காந்தி தேசிய ஊரக திட்டத்தில் நடக்கும் பணிகளை, சம்பந்தப்பட்ட அதிகாரிகள், முறையாக கண்காணிக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.லட்சக்கணக்கான ரூபாய் செலவு செய்து அமைக்கப்படும் மழை நீர் கால்வாய், பல ஆண்டுகளுக்கு உறுதியுடன் நீடித்து நிலைக்க வேண்டும்.

ஆனால், 'டெண்டர்' எடுக்கும் ஒப்பந்ததாரர்கள், ஆளும் கட்சியினர் மற்றும் அரசு அதிகாரிகள் என, பல தரப்பினருக்கும் கமிஷன் கொடுப்பதால், மனசாட்சியே இல்லாமல், தரமற்ற முறையில், பணியை செய்து முடிக்கின்றனர் என, சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X