சம்பவம் செய்தி

தமிழ்நாடு

போலீஸ் டைரி

Added : நவ 21, 2020
Share
Advertisement
உப்பு வியாபாரி மரணம்உத்திரமேரூர்: உத்திரமேரூர், ஏ.பி. சத்திரம், குளத்தங்கரை தெருவைச் சேர்ந்த சீனிவாசன் மகன் நாராயணன், 24. உப்பு வியாபாரி.கடந்த, 17ம் தேதி வீட்டில் இருந்து வெளியே சென்றவர், பின், வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.இந்நிலையில், அதே பகுதியில், 1 கி.மீ., துாரத்தில், மடுவுக்கு மழை நீர் செல்லும் கால்வாயில் நாராயணன் இறந்து கிடந்தார். சீனிவாசன்

உப்பு வியாபாரி மரணம்உத்திரமேரூர்: உத்திரமேரூர், ஏ.பி. சத்திரம், குளத்தங்கரை தெருவைச் சேர்ந்த சீனிவாசன் மகன் நாராயணன், 24. உப்பு வியாபாரி.கடந்த, 17ம் தேதி வீட்டில் இருந்து வெளியே சென்றவர், பின், வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.இந்நிலையில், அதே பகுதியில், 1 கி.மீ., துாரத்தில், மடுவுக்கு மழை நீர் செல்லும் கால்வாயில் நாராயணன் இறந்து கிடந்தார். சீனிவாசன் புகாரின்படி, உத்திரமேரூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
ரவுடி சிறையில் அடைப்பு வண்டலுார்: வண்டலுார் அடுத்த, மண்ணிவாக்கம், அம்பேத்கர் தெருவைச் சேர்ந்த சாரங்கபாணி மகன் பிரபாகரன், 39. இவர் மீது, மூன்று கொலை உள்ளிட்ட ஆறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்நிலையில், ஜூலை மாதம், தாம்பரம் வருவாய் கோட்டாட்சியர் முன், பிரபாகரனை போலீசார் ஆஜர்படுத்தினர்.அப்போது, ஓராண்டு காலத்திற்கு, பொது அமைதியை காப்பேன் எனக்கூறி, 50 ஆயிரம் ரூபாய்க்கு பிணைய பத்திரம் எழுதி கொடுத்து, கோட்டாட்சியரிடம், ஜாமின் பெற்றார்.இந்நிலையில், அதே பகுதியில், நிலப்பிரசனை தொடர்பாக ஒருவரை மிரட்டிய வழக்கில், இம்மாதம், 7ம் தேதி, போலீசார், பிரபாகரனை கைது செய்தனர். தொடர்ந்து, நன்னடத்தை விதிகளை மீறியதற்காக, 245 நாட்கள், பிரபாகரனை சிறையில் அடைக்கும்படி, கோட்டாட்சியர் ரவிச்சந்திரன் உத்தரவிட்டார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X