பொது செய்தி

தமிழ்நாடு

டெல்டா, ராமநாதபுரத்துக்கு 'ஆரஞ்ச் அலர்ட்'

Added : நவ 21, 2020
Share
Advertisement
சென்னை:வங்கக் கடலில், நாளை உருவாக உள்ள காற்றழுத்த தாழ்வு பகுதியால், டெல்டா மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களுக்கு, மிக கன மழைக்கான, 'ஆரஞ்ச்' எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.தமிழகத்தில் அக்., 28ல் துவங்கிய, வடகிழக்கு பருவ மழை பரவலாக பெய்து வருகிறது. குறிப்பாக, தென் மாவட்டங்களில், அதிக மழை பெய்து வருகிறது. தற்போது, வங்கக் கடலின் தென்கிழக்கு பகுதியில், நாளை உருவாக உள்ள,

சென்னை:வங்கக் கடலில், நாளை உருவாக உள்ள காற்றழுத்த தாழ்வு பகுதியால், டெல்டா மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களுக்கு, மிக கன மழைக்கான, 'ஆரஞ்ச்' எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் அக்., 28ல் துவங்கிய, வடகிழக்கு பருவ மழை பரவலாக பெய்து வருகிறது. குறிப்பாக, தென் மாவட்டங்களில், அதிக மழை பெய்து வருகிறது. தற்போது, வங்கக் கடலின் தென்கிழக்கு பகுதியில், நாளை உருவாக உள்ள, காற்றழுத்த தாழ்வு பகுதியால், டெல்டா மாவட்டங்கள் மற்றும் தென் மாவட்டங்களில், மிக கன மழை பெய்யும் என, சென்னை வானிலை மையம் எச்சரித்துள்ளது.

இது குறித்து, சென்னை வானிலை மைய தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன் அறிவிப்பு:தென்கிழக்கு வங்கக் கடலில் நிலவும், வளிமண்டல மேலடுக்கு சுழற்சி, வரும், 23ம் தேதிக்குள், காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று, பின் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும். இது, மேற்கு மற்றும் வடமேற்கு திசையில் நகர்ந்து, இலங்கை மற்றும் தமிழக கடலோர பகுதியை நோக்கி வரலாம்.

இதன் காரணமாக, நாகை, தஞ்சாவூர், திருவாரூர், சிவகங்கை, ராமநாதபுரம் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில், கன மழை பெய்யும். தென் மாவட்டங்களில், மிதமான மழை பெய்யும்.வரும், 24ம் தேதி, கடலுார், மயிலாடுதுறை, நாகை, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில், ஓரிரு இடங்களில், கன மழை முதல், மிக கன மழை பெய்யும். மற்ற மாவட்டங்களில், மிதமான மழை பெய்யும்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.


ராமநாதபுரம், தனுஷ்கோடிக்கு ஆபத்தா?



தென் கிழக்கு வங்கக் கடலில், இலங்கைக்கு தென் கிழக்கில் உருவாகும் காற்றழுத்த தாழ்வு பகுதி, தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, இலங்கையின் கிழக்கு பகுதி வழியாக, தமிழகத்துக்குள் நுழையும் என, எதிர்பார்க்கப்படுகிறது.இந்த தாழ்வு மண்டலம், புயலுக்கு முந்தைய நிலை வரை வலுவடையும் என்பதால், டெல்டா மாவட்டங்கள் மற்றும் ராமநாதபுரம் மாவட்டத்துக்கு, வரும், 24ம் தேதி, மிக கன மழைக்கான, 'ஆரஞ்ச்' எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

தாழ்வு மண்டலத்தை பொறுத்தவரை, மன்னார் வளைகுடா, பாக் ஜலசந்தி, தனுஷ்கோடி, ராமேஸ்வரம், பாம்பன் பாலம், மண்டபம் உள்ளிட்ட ராமநாதபுரம் மாவட்டத்தைச் சுற்றியும், இலங்கையின் யாழ்ப்பாணம், தலைமன்னார் உள்ளிட்ட பகுதிகளைச் சுற்றியும் மையம் கொள்ளும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த பகுதிகளில் மிக கன மழைக்கும், சூறாவளி காற்றுக்கும் அதிக வாய்ப்பு உள்ளதாக, செயற்கைக்கோள் படங்கள் அடிப்படையிலான வானிலையாளர் கணிப்புகளில் தெரிய வந்துள்ளது.கடந்த, 1964ல், தனுஷ்கோடியை புயல் தாக்கியதில், மீட்க முடியாத இழப்புகள் ஏற்பட்டன. தற்போது, 56 ஆண்டுகளுக்கு பின், அந்த பகுதியில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் மையம் கொள்ளும் சூழல் ஏற்பட்டுள்ளது.எனவே, அது போன்ற பாதிப்புகள் ஏற்படாமல், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை, அரசு மேற்கொள்ள வேண்டும் என்ற, கோரிக்கை எழுந்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X