சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பெண் மர்ம சாவு

Added : நவ 21, 2020
Share
Advertisement
பொன்னேரி : திருமணமாகி, இரண்டு ஆண்டுகளே ஆன இளம்பெண், மர்மமான முறையில் இறந்ததைத் தொடர்ந்து, போலீசார் விசாரிக்கின்றனர். பொன்னேரி அடுத்த, திருப்பாலைவனம் கிராமத்தில் வசித்து வருபவர் பிரவீன்குமார், 24. இவரது மனைவி சிவரஞ்சனி, 23. கடந்த, 2018ல் காதல் திருமணம் செய்து கொண்டனர். பிரவீன்குமார், அடிக்கடி மனைவியை வரதட்சணை கேட்டு துன்புறுத்தி வந்ததாக கூறப்படுகிற சிவரஞ்சனியின்

பொன்னேரி : திருமணமாகி, இரண்டு ஆண்டுகளே ஆன இளம்பெண், மர்மமான முறையில் இறந்ததைத் தொடர்ந்து, போலீசார் விசாரிக்கின்றனர்.

பொன்னேரி அடுத்த, திருப்பாலைவனம் கிராமத்தில் வசித்து வருபவர் பிரவீன்குமார், 24. இவரது மனைவி சிவரஞ்சனி, 23. கடந்த, 2018ல் காதல் திருமணம் செய்து கொண்டனர். பிரவீன்குமார், அடிக்கடி மனைவியை வரதட்சணை கேட்டு துன்புறுத்தி வந்ததாக கூறப்படுகிற சிவரஞ்சனியின் பெற்றோர் இருவரையும் சமாதானம் செய்து வைத்திருந்தனர். இந்நிலையில், நேற்று காலை, சிவரஞ்சனி மர்மமான முறையில் வீட்டில் இறந்து இருந்தார். பெண்ணின் பெற்றோர், திருப்பாலைவனம் போலீசில், சிவரஞ்சனியின் உடலில் ரத்த காயங்கள் இருப்பதால், உரிய விசாரணை மேற்கொள்ள வேண்டும் என, புகார் அளித்தனர். அதன்படி, போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X