கைவினை வணிக வளாக வாடகை ரத்தாகுமா?

Added : நவ 21, 2020
Share
Advertisement
மாமல்லபுரம்: மாமல்லபுரத்தில், கைவினை வணிக வளாக, கடைக்காரர்கள், கொரோனா கால, மாத வாடகை விலக்களிக்க, வலியுறுத்துகின்றனர். மாமல்லபுரத்தில், மாவட்ட உள்ளூர் திட்டக் குழும நிர்வாகத்தின் கீழ், ஐந்து ரதங்கள் சிற்ப பகுதியில், கைவினைப் பொருட்கள் வணிக வளாகம், 100 கடைகளுடன் உள்ளது. கைவினை வியாபாரிகள், 15 ஆண்டுகளாக, இங்கு வியாபாரம் செய்கின்றனர்.இவ்வளாகம், வியாபார மேம்பாட்டிற்கேற்ற

மாமல்லபுரம்: மாமல்லபுரத்தில், கைவினை வணிக வளாக, கடைக்காரர்கள், கொரோனா கால, மாத வாடகை விலக்களிக்க, வலியுறுத்துகின்றனர்.

மாமல்லபுரத்தில், மாவட்ட உள்ளூர் திட்டக் குழும நிர்வாகத்தின் கீழ், ஐந்து ரதங்கள் சிற்ப பகுதியில், கைவினைப் பொருட்கள் வணிக வளாகம், 100 கடைகளுடன் உள்ளது. கைவினை வியாபாரிகள், 15 ஆண்டுகளாக, இங்கு வியாபாரம் செய்கின்றனர்.இவ்வளாகம், வியாபார மேம்பாட்டிற்கேற்ற வடிவமைப்பில் இல்லை. இதனால், 10க்கும் மேற்பட்ட கடைகளுக்கே, வியாபாரம் நடந்து, 90 சதவீத கடைகள் வெறிச்சோடின.இதன் காரணமாக, பெரும்பாலானோர், கடைக்கு வாடகை கட்டாமல், பெரும்தொகை நிலுவை வைத்துள்ளனர். நிலுவை தொகைக்கு, பல மடங்கு வட்டியும் விதிக்கப்பட்டுள்ளது.இது ஒருபுறமிருக்க, கொரோனா வைரஸ் தொற்று தடுப்பு ஊரடங்கால், சுற்றுலா தடைபட்டு, எட்டு மாதங்களாக, வியாபாரம் முடங்கியுள்ளது.

கடற்கரைக் கோவில் பகுதியில் உள்ள, குழும கடைகளிலும், வாடகை நிலுவை உள்ளது. இச்சூழலில், பழைய நிலுவைத் தொகைக்கு வட்டி, கொரோனா தொற்று பாதிப்பு மற்றும் சுற்றுலா தடை இருப்பதால், வாடகையை ரத்து செய்ய, கடைக்காரர்கள் வலியுறுத்தியுள்ளனர். துறை அமைச்சர், ஓ.பி.பன்னீர்செல்வத்திடம், முறையிடவும் முயன்று வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X