அரசியல் செய்தி

தமிழ்நாடு

'தி.மு.க., முயற்சியை முறியடிக்கணும்'

Added : நவ 21, 2020
Share
Advertisement
மாமல்லபுரம் : ''ஆட்சியில் இல்லாத இடைவெளியால், ஆட்சிக்கு வர துடிக்கும், தி.மு.க., முயற்சியை, அ.தி.மு.க.,வினர் முறியடிக்க வேண்டும்,'' என, அ.தி.மு.க., கூட்டத்தில், அமைச்சர் பாண்டியராஜன் பேசினார். செங்கல்பட்டு மாவட்டம், கூவத்துாரில், செய்யூர் தொகுதி, அ.தி.மு.க., ஓட்டுச்சாவடி முகவர்கள் ஒருங்கிணைப்பு கூட்டம், நேற்று நடந்தது. அ.தி.மு.க.,வின் மாவட்ட தேர்தல் பொறுப்பாளர், தமிழ்

மாமல்லபுரம் : ''ஆட்சியில் இல்லாத இடைவெளியால், ஆட்சிக்கு வர துடிக்கும், தி.மு.க., முயற்சியை, அ.தி.மு.க.,வினர் முறியடிக்க வேண்டும்,'' என, அ.தி.மு.க., கூட்டத்தில், அமைச்சர் பாண்டியராஜன் பேசினார். செங்கல்பட்டு மாவட்டம், கூவத்துாரில், செய்யூர் தொகுதி, அ.தி.மு.க., ஓட்டுச்சாவடி முகவர்கள் ஒருங்கிணைப்பு கூட்டம், நேற்று நடந்தது. அ.தி.மு.க.,வின் மாவட்ட தேர்தல் பொறுப்பாளர், தமிழ் வளர்ச்சி அமைச்சர் பாண்டியராஜன் பங்கேற்று பேசியதாவது:ஒவ்வொருவரும், அதிக வாக்காளர்களை சேர்க்க வேண்டும். அவர்களும், அ.தி.மு.க.,வுக்கே ஓட்டளிக்க, முயற்சி எடுக்கவேண்டும். மக்களிடம், அரசு திட்டங்கள், சாதனைகளை விளக்கி, பிரசாரம் செய்ய வேண்டும். தி.மு.க., 10 ஆண்டுகள், ஆட்சியில் இல்லாத இடைவெளியால், ஆட்சிக்கு வர துடிக்கிறது.

இதை முறியடிக்க, தீவிரமாக செயலாற்ற வேண்டும்.செய்யூர் தொகுதியில், ஏற்கனவே இழந்த வெற்றியை, மீட்க வேண்டும். தேர்தலின்போது, ஆளுங்கட்சி என்பதால், சில வசதிகள் உண்டு. பிரச்னைகளும், அதிகம். நாம், மீண்டும் வெற்றி பெறுவோம். இவ்வாறு, அவர் கூறினார். நிருபர்களிடம், அமைச்சர் கூறுகையில், ''மத்திய அரசிலும், தமிழை, ஆட்சி மொழியாக அறிவிக்க, வலியுறுத்தி உள்ளோம். தமிழகத்தில் உள்ள, மத்திய அரசு அலுவலகங்களில், தமிழில் அறிவிப்பு பலகை, மொழிபெயர்ப்பு வாசகங்கள் இடம்பெறவும் கேட்டுள்ளோம்,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X