திருப்போரூர் : திருப்போரூர் கந்தசுவாமி கோவிலில், கந்த சஷ்டி சூரசம்ஹாரம் விழா, நேற்று விமரிசையாக நடந்தது.
திருப்போரூர் கந்த சுவாமி கோவிலில், ஆண்டுதோறும் கொண்டாடப்படும் கந்த சஷ்டி விழா, இம்மாதம், 15ம் தேதி, கொடியேற்றத்துடன் துவங்கியது. கொரோனா தொற்று கராணமாக, விழாவில் பங்கேற்க, பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.காலை மற்றும் மாலை உற்சவங்களில், கந்தசுவாமி பெருமான், சிறப்பு அலங்காரத்த்தில் எழுந்தருளி, கோவில் உட்பிரகாரத்தில் வலம் வந்தார். இதில், பிரதான விழாவான சூரசம்ஹாரம், நேற்று மாலை, எளிய முறையில் நடந்தது.முன்னதாக, மதியம், 12:00 மணியளவில், சரவணப்
பொய்கை குளத்தில், சுவாமி, தீர்த்தவாரிக்கு எழுந்தருளினார். தொடர்ந்து,மூலவருக்கு மகா அபிஷேகம் நடைபெற்றது.பின், மாலை, 5:00 மணிக்கு, வள்ளி, தெய்வானையுடன், சிறப்பு அலங்காரத்தில், கோவில் வட்ட மண்டபத்தில் கந்தசுவாமி எழுந்தருளி, தன்னுடைய வீரவேலால், சூரபத்மனை வதம் செய்தார்.உள்ளூர் மற்றும் வெளியூர் பக்தர்கள் நுாற்றுக் கணக்கானோர், கோவில் மாடவீதிகளில் போடப்பட்ட தடுப்புகளில் நின்று, 'அரோகரா... அரோகரா' கோஷத்துடன், சுவாமியை வழிபட்டனர்.இன்று மாலை, 6:00 மணிக்கு, கந்தசுவாமி, தெய்வானையை மணம் முடிக்கும் திருக்கல்யாண வைபவம் நடைபெறுகிறது. இதற்கும், பக்தர்களுக்கு அனுமதி இல்லை.விழா ஏற்பாடுகளை, கோவில் செயல் அலுவலர் சக்திவேல், கோவில் மேலாளர் வெற்றிவேல் செய்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE