சசிகலாவுக்கு சிறப்பு சலுகை இல்லை கர்நாடக அமைச்சர் திட்டவட்டம்

Added : நவ 21, 2020
Share
Advertisement
பெங்களூரு:''சொத்து குவிப்பு வழக்கில் சிறையில் இருக்கும், சசிகலாவை விடுதலை செய்வதில், சிறப்பு சலுகைகள் அளிக்கப்படாது. கர்நாடக சிறைத்துறை விதிகளின்படியே, அவர் விடுதலை செய்யப்படுவார்,'' என, கர்நாடக உள்துறை அமைச்சர், பசவராஜ் பொம்மை, திட்டவட்டமாக தெரிவித்தார்.சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை பெற்ற சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர், பெங்களூரு பரப்பன அக்ரஹாரா, மத்திய

பெங்களூரு:''சொத்து குவிப்பு வழக்கில் சிறையில் இருக்கும், சசிகலாவை விடுதலை செய்வதில், சிறப்பு சலுகைகள் அளிக்கப்படாது. கர்நாடக சிறைத்துறை விதிகளின்படியே, அவர் விடுதலை செய்யப்படுவார்,'' என, கர்நாடக உள்துறை அமைச்சர், பசவராஜ் பொம்மை, திட்டவட்டமாக தெரிவித்தார்.

சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை பெற்ற சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர், பெங்களூரு பரப்பன அக்ரஹாரா, மத்திய சிறையில், 2017 பிப்ரவரி, 15ல் அடைக்கப்பட்டனர். கர்நாடக சிறைத்துறை வட்டார தகவல்படி, அவர்களின் தண்டனை காலம், அடுத்த ஆண்டு ஜன., 27ல் முடிகிறது. இதற்கிடையில், உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி, சசிகலாவுக்கு மட்டும், 10 கோடியே, 10 ஆயிரம் ரூபாய்க்கான, 'டிடி' நான்கு பேர் பெயரில் எடுக்கப்பட்டு, இம்மாதம், 17ம் தேதி, பெங்களூரு தனி நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டது.

இதற்கான ரசீது, பரப்பன அக்ரஹாரா, மத்திய சிறை தலைமை கண்காணிப்பாளரிடம் வழங்கப்பட்டது. இதனால், இம்மாத இறுதிக்குள், சசிகலா விடுதலையாவார் என, அவரின் ஆதரவாளர்கள் தெரிவித்தனர். நன்னடத்தை விதிகளின்படி, அவருக்கு சிறப்பு சலுகை கோரி, சசிகலா வழக்கறிஞர் சார்பில், சிறைத்துறை அதிகாரிடம் மனுவும் தரப்பட்டு உள்ளது.

இந்நிலையில், கர்நாடக உள்துறை அமைச்சர் பசவராஜ் பொம்மை, பெங்களூரு விதான் சவுதாவில், நேற்று கூறியதாவது:சொத்து குவிப்பு வழக்கில், சிறையில் இருக்கும் சசிகலா விடுதலையில், சிறப்பு சலுகைகள் அளிக்கப்படாது. கர்நாடக சிறைத்துறை விதிகளின்படியே, அவர் விடுதலை செய்யப்படுவார்.இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X