பொது செய்தி

தமிழ்நாடு

வாக்காளர் சிறப்பு முகாம் செங்கையில் இன்று துவக்கம்

Added : நவ 21, 2020
Share
Advertisement
செங்கல்பட்டு : செங்கல்பட்டு மாவட்டத்தில், வாக்காளர் சிறப்பு முகாம், இன்று துவங்குகிறது. செங்கல்பட்டு மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் கலெக்டர் ஜான்லுாயிஸ் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:செங்கல்பட்டு மாவட்டத்தில், சோழிங்கநல்லுார், பல்லாவரம், தாம்பரம், செங்கல்பட்டு, திருப்போரூர், மதுராந்தகம், செய்யூர் என, ஏழு சட்டசபை தொகுதிகள் உள்ளன. இந்த தொகுதிகளில், 764 ஓட்டுச்சாவடி

செங்கல்பட்டு : செங்கல்பட்டு மாவட்டத்தில், வாக்காளர் சிறப்பு முகாம், இன்று துவங்குகிறது.

செங்கல்பட்டு மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் கலெக்டர் ஜான்லுாயிஸ் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:செங்கல்பட்டு மாவட்டத்தில், சோழிங்கநல்லுார், பல்லாவரம், தாம்பரம், செங்கல்பட்டு, திருப்போரூர், மதுராந்தகம், செய்யூர் என, ஏழு சட்டசபை தொகுதிகள் உள்ளன. இந்த தொகுதிகளில், 764 ஓட்டுச்சாவடி மையங்கள் உள்ளன.இங்கு, இன்று துவங்கி, 22ம் தேதி, வரும் டிசம்பர் மாதம், 12, 13 ஆகிய தேதிகளில், காலை, 9:30 முதல் மாலை, 5:00 மணி வரை, தேர்தல் வாக்காளர் பட்டியலில், புதிய வாக்காளர் சேர்த்தல், நீக்கல் மற்றும் திருத்தம் தொடர்பான படிவங்கள், அந்தந்த பாகங்களின், ஓட்டுச்சாவடி அலுவலர்கள் மூலமாக வழங்கப்படும்.உரிய படிவங்கள் பெற்று பயன் பெறலாம்.இவ்வாறு, அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X