பொது செய்தி

தமிழ்நாடு

கட்டிய 6 மாதத்தில் சேதமடைந்த தடுப்பணை: விவசாயிகள் வேதனை

Added : நவ 21, 2020 | கருத்துகள் (3)
Share
Advertisement
சாயல்குடி : சாயல்குடி அருகே ரூ.9.87 லட்சத்தில் கட்டிய ஆறு மாதத்தில் சேதமடைந்த கூராங்கோட்டை தடுப்பணையால் விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர்.கூராங்கோட்டையில் மலட்டாற்றுக்கு வீணாக செல்லும் நீரை தேக்கி வைப்பதற்காக தேசிய ஊரக வேலைவாய்ப்புத்திட்டத்தின் கீழ் ரூ.9.87 லட்சம் மதிப்பீட்டில் ஜூன் மாதம் புதிய தடுப்பணை கட்டி முடிக்கப்பட்டது. இந்த தடுப்பணை மூலம் 300 ஏக்கர் பரப்பில்
 கட்டிய 6 மாதத்தில் சேதமடைந்த தடுப்பணை: விவசாயிகள் வேதனை

சாயல்குடி : சாயல்குடி அருகே ரூ.9.87 லட்சத்தில் கட்டிய ஆறு மாதத்தில் சேதமடைந்த கூராங்கோட்டை தடுப்பணையால் விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர்.

கூராங்கோட்டையில் மலட்டாற்றுக்கு வீணாக செல்லும் நீரை தேக்கி வைப்பதற்காக தேசிய ஊரக வேலைவாய்ப்புத்திட்டத்தின் கீழ் ரூ.9.87 லட்சம் மதிப்பீட்டில் ஜூன் மாதம் புதிய தடுப்பணை கட்டி முடிக்கப்பட்டது. இந்த தடுப்பணை மூலம் 300 ஏக்கர் பரப்பில் விவசாயம் நடக்கும் என விவசாயிகள் கருதியிருந்தனர்.

ஆனால் தரமற்ற முறையில் கட்டப்பட்ட தடுப்பணை கடந்த இரு நாட்களாக பெய்து வந்த மழையால் சுவர் இடிந்தும், தரைப்பகுதி கான்கிரிட்பூச்சுகளால் உதிர்ந்தும் காணப்படுகிறது. இதனால் மழை பெய்தும் நீரை சேமித்து வைக்க முடியாமல் வீணாக கடலில் கலந்தது. இதனால் விவசாயிகள் மிகுந்த மனவேதனையடைந்துள்ளனர்.

விவசாயி எஸ்.பி.முருகேசன் கூறியதாவது; விவசாயிகளின் வாழ்வாதாரம், நிலத்தடி நீர் மட்டம் பெருகவும் தடுப்பணைகள் பல லட்சம் செலவு செய்துகட்டப்பட்டது. ஆனால் தரமில்லாமல் பெயருக்கு கட்டப்பட்ட தடுப்பணை சேதமடைந்து தண்ணீரை சேமிக்க முடியாமல் நீர் வீணாக கடலுக்கு செல்கிறது.

இதனால் தடுப்பணையின் நோக்கமே கேள்விக்குறியாகியுள்ளது.கடலாடி பி.டி.ஓ., (கிராம ஊராட்சி) பாண்டி கூறியதாவது; சேதமடைந்த கூராங்கோட்டை தடுப்பணையை ஆய்வு செய்துள்ளோம். விசாரணை செய்யப்பட்டு வருகிறது. விரைவில் சேதமடைந்த பகுதிகள் சரிசெய்யப்பட்டு, தரமான முறையில் மராமத்துப்பணிகளை செய்ய முடுக்கிவிடப்படும் என்றார்.

Advertisement


வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
21-நவ-202009:27:26 IST Report Abuse
உஷா வாசுதேவன் கரிகாலன் கட்டி வைத்த கல்லணை மாதிரி காரண்டியை எதிர்பார்க்கலாமா? இன்றைய ஆட்சியில்.
Rate this:
Cancel
21-நவ-202008:50:05 IST Report Abuse
தமிழ் வீட்டு காம்பௌண்ட் சுவரை கட்டிட்டு தடுப்பணைன்னு சொல்றாங்க.
Rate this:
Cancel
21-நவ-202007:13:48 IST Report Abuse
ஆப்பு ஏன்? நீர் மேலாண்மையில் முதலிடம் பெற்ற குடிமராமத்து முதல்வரை கேட்க வேண்டிதுதானே? இல்லே மதுரை நீதிமன்றத்தில் முறையிடலாம். அவிய்ங்களும் வேதனை தெரிவித்து வழக்கை முடித்து வெச்சுருவாங்க.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X