பொது செய்தி

தமிழ்நாடு

கொரோனா பாதித்த, 2,173 பேர் நலம்

Added : நவ 21, 2020
Share
Advertisement
சென்னை:கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்தவர்களில், ௨,173 பேர் நேற்று குணமடைந்து வீடு திரும்பினர். தற்போது, 13 ஆயிரத்து, 404 பேர் சிகிச்சையில் உள்ளனர். இதுகுறித்து, சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:தமிழகத்தில் உள்ள, 214 கொரோனா பரிசோதனை ஆய்வகங்களில், மட்டும், 68 ஆயிரத்து, 33 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டு, 1,688 பேருக்கு தொற்று உறுதியானது. அதிகபட்சமாக சென்னையில், 489;

சென்னை:கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்தவர்களில், ௨,173 பேர் நேற்று குணமடைந்து வீடு திரும்பினர்.

தற்போது, 13 ஆயிரத்து, 404 பேர் சிகிச்சையில் உள்ளனர். இதுகுறித்து, சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:தமிழகத்தில் உள்ள, 214 கொரோனா பரிசோதனை ஆய்வகங்களில், மட்டும், 68 ஆயிரத்து, 33 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டு, 1,688 பேருக்கு தொற்று உறுதியானது. அதிகபட்சமாக சென்னையில், 489; கோவையில், 147; திருவள்ளூரில், 132; செங்கல்பட்டில், 125 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

இதுவரை, 1.14 கோடி மாதிரிகள் பரிசோதனையில், ஏழு லட்சத்து, 66 ஆயிரத்து, 677 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டு உள்ளது. இதில், நான்கு லட்சத்து, 63 ஆயிரத்து, 217 பேர் ஆண்கள்; மூன்று லட்சத்து, ௩,427 பேர் பெண்கள்; ௩௩ பேர் மூன்றாம் பாலினத்தவர். சிகிச்சை பெற்றவர்களில், 2,173 பேர் நேற்று குணமடைந்து வீடு திரும்பினர். இவர்களுடன் சேர்த்து, ஏழு லட்சத்து, 41 ஆயிரத்து, 705 பேர் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பியுள்ளனர்.

தற்போது, சென்னையில், 4,622; செங்கல்பட்டில், 878; கோவையில், 779; திருவள்ளூரில், 707 பேர் என, 13 ஆயிரத்து, 404 பேர் சிகிச்சை பெறுகின்றனர். நேற்று, ௧௮ பேர் உட்பட, இதுவரை, 11 ஆயிரத்து, 568 பேர் இறந்துள்ளனர்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X