சம்பவம் செய்தி

தமிழ்நாடு

காவல் துறையில் 350 கோடி ரூபாய் ஊழல்

Added : நவ 21, 2020
Share
Advertisement
சென்னை:'காவல் துறையில், 350 கோடி ரூபாய் ஊழல் நடந்துள்ளது' என்ற, குற்றச்சாட்டு எழுந்துள்ளதால், டெண்டர் விபரங்களை அளிக்கும்படி, டி.ஜி.பி.,க்கு, லஞ்ச ஒழிப்பு துறை கடிதம் எழுதி உள்ளது.தமிழக காவல் துறைக்கு, அதிநவீன கருவிகள் கொள்முதல் செய்ய, அரசு நிதி ஒதுக்கி வருகிறது. கருவிகளை கொள்முதல் செய்யும் பணியை, காவல் துறையின் தகவல் தொழில் நுட்பப்பிரிவு மேற்கொண்டு வருகிறது. அந்த

சென்னை:'காவல் துறையில், 350 கோடி ரூபாய் ஊழல் நடந்துள்ளது' என்ற, குற்றச்சாட்டு எழுந்துள்ளதால், டெண்டர் விபரங்களை அளிக்கும்படி, டி.ஜி.பி.,க்கு, லஞ்ச ஒழிப்பு துறை கடிதம் எழுதி உள்ளது.

தமிழக காவல் துறைக்கு, அதிநவீன கருவிகள் கொள்முதல் செய்ய, அரசு நிதி ஒதுக்கி வருகிறது. கருவிகளை கொள்முதல் செய்யும் பணியை, காவல் துறையின் தகவல் தொழில் நுட்பப்பிரிவு மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், 2016 - 18ம் ஆண்டு வரை, 'ஒயர்லெஸ்' கருவிகள், டிஜிட்டல் மொபைல் போன்கள் மற்றும், 'சிசிடிவி' கேமராக்கள் உள்ளிட்ட கருவிகள் கொள்முதல் செய்ததில், 350 கோடி ரூபாய் ஊழல் நடந்து இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதுகுறித்து விசாரிக்கும்படி, 2019ல், லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு, டி.ஜி.பி., திரிபாதி உத்தர விட்டார். லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், ஊழல் நடந்து இருப்பதற்கான முகாந்திரம் இருப்பது தெரியவந்துள்ளது. அதிகபட்சமாக, ஒரே நிறுவனத்திற்கு டெண்டர் விடப்பட்டு இருப்பதை, லஞ்ச ஒழிப்பு போலீசார் கண்டறிந்துள்ளனர்.

தொழில் நுட்பப்பிரிவு, எஸ்.பி., - டி.எஸ்.பி., வீடுகள் உள்பட, 18 இடங்களில், லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனையிலும் ஈடுபட்டனர்; 14 அதிகாரிகள் மீது வழக்கு பதிந்தனர்.இந்நிலையில், இந்த ஊழல் விவகாரம் தொடர்பாக, டெண்டர் விடப்பட்ட நிறுவனங்கள் மற்றும் எவ்வளவு ரூபாய்க்கு, தகவல் கருவிகள் கொள்முதல் செய்யப்பட்டன என்பது உள்ளிட்ட விபரங்களை அளிக்கும்படி, டி.ஜி.பி.,க்கு, லஞ்ச ஒழிப்பு துறை கடிதம் எழுதியுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X