குடியிருப்பு பகுதியில் சூழ்ந்துள்ள பாதாளசாக்கடை கழிவுநீர்: ராமநாதபுரம் மக்கள் அச்சம்| Dinamalar

குடியிருப்பு பகுதியில் சூழ்ந்துள்ள பாதாளசாக்கடை கழிவுநீர்: ராமநாதபுரம் மக்கள் அச்சம்

Added : நவ 21, 2020
Share
ராமநாதபுரம் : ராமநாதபுரத்தில் போதிய வடிகால்வசதியின்றி மழைநீருடன் பாதாளசாக்கடை கழிவுநீர் தேங்கியதால் மக்கள் சுகாதாரக்கேட்டால் நோய்தொற்று அச்சத்தில் உள்ளனர்.ராமநாதபுரத்தில் பெய்து வரும் மழையால் போதிய வடிகால் வசதியின்றி ராமநாதபுரம்- மதுரை ரோடு, பஸ் ஸ்டாண்ட் பகுதி,ராமேஸ்வரம் ரோடு, பாரதிநகர் ரோட்டில் மழை நீருடன் கழிவுநீர் சேர்ந்து குளம்போல தேங்கியது.கடந்த

ராமநாதபுரம் : ராமநாதபுரத்தில் போதிய வடிகால்வசதியின்றி மழைநீருடன் பாதாளசாக்கடை கழிவுநீர் தேங்கியதால் மக்கள் சுகாதாரக்கேட்டால் நோய்தொற்று அச்சத்தில் உள்ளனர்.

ராமநாதபுரத்தில் பெய்து வரும் மழையால் போதிய வடிகால் வசதியின்றி ராமநாதபுரம்- மதுரை ரோடு, பஸ் ஸ்டாண்ட் பகுதி,ராமேஸ்வரம் ரோடு, பாரதிநகர் ரோட்டில் மழை நீருடன் கழிவுநீர் சேர்ந்து குளம்போல தேங்கியது.கடந்த ஒருவாரமாக காட்டுபிள்ளையார்கோயில் தெரு, வசந்தநகர் வீதிகளில் குளம்போல பாதாளசாக்கடை கழிவுநீர் தேங்கி துர்நாற்றம் வீசுகிறது. கனமழை பெய்தால் வீடுகளுக்குள் கழிவுநீர் புகுந்துவிடுதால் சுகாதாரக்கேட்டால் மக்கள் சிரமப்படுகின்றனர்.

மணிமாறன் கூறுகையில், 'பாதாள சாக்கடை பராமரிப்பு பெயரளவில் உள்ளதால் சிறிய மழைபெய்தால் கூட மழைநீருடன் கழிவுநீர் வீட்டிற்குள் வந்துவிடுகிறது. பன்றிகளும் சுற்றித்திரிகின்றன, சுகாதாரக்கேட்டால் அவதிப்படுகிறோம். பிள்ளையார்கோயில், ஐயப்பன்கோயில் அருகேயும் தேங்கியுள்ளதால் பக்தர்கள் பாதிக்கப்படுகின்றனர்,'என்றார்.

வசந்தநகர் பிரேம் கூறுகையில்,'நகராட்சியில் புகார் அளித்தால் பெயரளவில் லாரியில் உறிஞ்சு எடுக்கின்றனர். அதன்பின் கண்டுகொள்ளவில்லை, மழைநீருடன் கழிவுநீர் தேங்கிகிடக்கிறது. குழந்தைகள், பெரியவர்கள் நோய்தொற்று அச்சத்தில் உள்ளோம்.பாதாள சாக்கடை பிரச்னைக்கு தீர்வு காண சுத்தம் செய்ய நகராட்சி அதிகாரிகள் முன்வர வேண்டும்,'என்றார்.

பரமக்குடி: பரமக்குடி நகராட்சிக்கு உட்பட்ட 36 வார்டுகளிலும் வீடுகள் மற்றும் வணிக வளாகங்களை சீரமைப்பு செய்வோர் தங்களது படிக்கட்டுகளை வாறுகால் வரை ஆக்கிரமிக்கின்றன. இந்நிலையில் கடந்த சில நாட்களாக பரமக்குடியில் பெய்து வரும் கன மழையை அடுத்து ஆர்ச், பெரிய பஜார், சவுக்கத்அலி ரோடு, உழவர் சந்தை, குத்துக்கல் தெரு என அனைத்து பகுதிகளிலும் தண்ணீர் நாள் முழுவதும் தேங்கி நிற்கும் நிலை உள்ளது.

இப்பகுதிகளில் வாறுகால்களில் அடைப்பு ஏற்பட்டுள்ளதால் தண்ணீர் வழிந்தோட மணிக்கணக்கில் ஆகின்றன.இதனால் வாகன ஓட்டிகள் பாதசாரிகள் பள்ளம் மேடு தெரியாமல் விபத்துக்கு உள்ளாகி வருகின்றனர். மேலும் தெருவோர கடைகள், காய்கறிகள் என விரித்து வைத்திருப்போர் கழிவு நீருக்கு மத்தியில் வியாபாரம் செய்யும் நிலை உள்ளது.இத்துடன் தொடர்ந்து சென்று வரும் வாகனங்களால் நகராட்சி பகுதியில் ரோடுகள் உடைந்து வீணாகி வருகிறது.ஆகவே நகராட்சி அதிகாரிகள் நகரின் கட்டமைப்பை சீரமைத்து, ஆக்கிரமிப்புகளை அகற்றினால் மட்டுமே இதற்கு நிரந்தர தீர்வு ஏற்படும்.--------------

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X