பொது செய்தி

தமிழ்நாடு

பாசிப்பட்டினத்தில் படகுகள் நிறுத்த இடமில்லாமல் மீனவர்கள் தவிப்பு

Added : நவ 21, 2020
Share
Advertisement
திருவாடானை : தொண்டி அருகே பாசிபட்டினத்தில் முகத்துவாரத்தில் அடர்ந்துள்ள சீமைக்கருவேல மரங்களால் படகுகளை நிறுத்த முடியாமல் மீனவர்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.தொண்டி அருகே பாசிபட்டினத்தில் 400க்கும் மேற்பட்ட நாட்டுபடகு மீனவர்கள் உள்ளனர். படகுகளை கலங்கரை விளக்கம் அருகே முகத்துவாரத்தில் நிறுத்தி விட்டு மீன்பிடிக்க செல்லும் போது படகுகளில் செல்வது வழக்கம்.

திருவாடானை : தொண்டி அருகே பாசிபட்டினத்தில் முகத்துவாரத்தில் அடர்ந்துள்ள சீமைக்கருவேல மரங்களால் படகுகளை நிறுத்த முடியாமல் மீனவர்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

தொண்டி அருகே பாசிபட்டினத்தில் 400க்கும் மேற்பட்ட நாட்டுபடகு மீனவர்கள் உள்ளனர். படகுகளை கலங்கரை விளக்கம் அருகே முகத்துவாரத்தில் நிறுத்தி விட்டு மீன்பிடிக்க செல்லும் போது படகுகளில் செல்வது வழக்கம். தற்போது முகத்துவாரத்தில் சீமைகருவேலமரங்கள் அடர்ந்து வளர்ந்துள்ளதால்படகுகளை நிறுத்த முடியாமல் மீனவர்கள் அவதிபடுகின்றனர்.

மீனவர் ராமமூர்த்தி கூறியதாவது; ஆற்றின் முகத்துவாரத்தில் செடிகள்அடர்ந்துள்ளதால் படகுகளை நிறுத்தமுடியவில்லை.இதனால் ஒரு கி.மீ. துாரமுள்ள எஸ்.பி.பட்டினம் முகத்துவாரத்தில் படகுகளை நிறுத்துகிறோம். ஆற்றை சீரமைக்க மீன்வளத்துறை மற்றும் கலெக்டர் அலுவலகத்தில் பலமுறை மனுக்கள் கொடுத்தும் பயனில்லை,என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X