பொது செய்தி

தமிழ்நாடு

ராமகிருஷ்ண மடத்தின் புதிய பிரார்த்தனை கூடம்; தலைவர் சுதபானந்தர் தகவல்

Added : நவ 21, 2020
Share
Advertisement
ராமநாதபுரம் : ராமநாதபுரம் அருகே ராமகிருஷ்ண மடத்தில் புதிய வளாகத்தில் கட்டப்பட்ட சமுதாய கூடம், பிரார்த்தனை கூடம் திறப்பு விழா நவ.27 ல் நடக்கிறது.இதுகுறித்து ராமநாதபுரம் ராமகிருஷ்ண மடத்தின் தலைவர் சுவாமி சுதபானந்தர் கூறியதாவது:2016 முதல் ராமநாதபுரத்தில் ராமகிருஷ்ண மடம் துவக்கப்பட்டுள்ளது. மடம் சார்பில் இதுவரை 120 ஏழை மாணவர்களுக்கு செவிலியர் படிப்பு மற்றும் கலை அறிவியல்
 ராமகிருஷ்ண மடத்தின் புதிய பிரார்த்தனை கூடம்; தலைவர் சுதபானந்தர் தகவல்

ராமநாதபுரம் : ராமநாதபுரம் அருகே ராமகிருஷ்ண மடத்தில் புதிய வளாகத்தில் கட்டப்பட்ட சமுதாய கூடம், பிரார்த்தனை கூடம் திறப்பு விழா நவ.27 ல் நடக்கிறது.

இதுகுறித்து ராமநாதபுரம் ராமகிருஷ்ண மடத்தின் தலைவர் சுவாமி சுதபானந்தர் கூறியதாவது:2016 முதல் ராமநாதபுரத்தில் ராமகிருஷ்ண மடம் துவக்கப்பட்டுள்ளது. மடம் சார்பில் இதுவரை 120 ஏழை மாணவர்களுக்கு செவிலியர் படிப்பு மற்றும் கலை அறிவியல் கல்லுாரிகளில் சேர்வதற்கு தலா ரூ.15 ஆயிரம் வீதம் வழங்கப்பட்டுள்ளது. செவிலியர் படிப்பு முடித்தவர்கள் பணியில் சேர்ந்துள்ளனர்.

ராமேஸ்வரம் ரோட்டில் நாகாச்சி ஊராட்சி பகுதியில் ராமகிருஷ்ண மடத்திற்கான புதிய வளாகம் 14.30 ஏக்கரில் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு ஆண்டிற்கு 75 ஏழை குழந்தைகளுக்கு மாலை நேர கல்வி கற்பிக்க உள்ளோம். ஏழை குழந்தைகளுக்கு கல்வி, சீருடை, உணவுக்காக இது வரை ரூ.12 லட்சம் செலவிடப்பட்டுள்ளது.நாகாச்சி ஊராட்சி கிராமங்களில் வாரந்தோறும் இலவச மருத்துவ முகாம் நடத்தப்படுகிறது. ஏழைப் பெண்களுக்கு இலவச தையல் இயந்திரம் வழங்கப்பட்டு பயிற்சியும் அளிக்கப்படுகிறது.

ராமகிருஷ்ண மடத்தின் புதிய வளாகத்தில் 7000 சதுர அடியில் பிரார்த்தனை கூடம், 4000 சதுர அடியில் உணவக்கூடம் மற்றும் சமுதாய கூடம் அமைக்கப்பட்டுள்ளது. சமுதாய கூடத்தை நவ.,27 காலை 7:30 மணிக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி புகழேந்தி திறந்து வைக்கிறார். மதுரை ராமகிருஷ்ண மடம் தலைவர் சுவாமி கமலாத்மானந்தர் பிரார்த்தனை மற்றும் உணவு கூடங்களை திறக்கிறார்.பிரார்த்தனை கூடத்தின் மேல் பகுதியில் சுவாமி விவேகானந்தரின் ஆறரை அடி உயர சிலை திறக்கப்படுகிறது, என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X