சிதிலமடைந்து வரும் காரைக்குடி அரசு பள்ளி கட்டடம்

Added : நவ 21, 2020
Share
Advertisement
காரைக்குடி : காரைக்குடி, முத்துப்பட்டிணம் மு.வி., அரசு மேல்நிலை பள்ளி கட்டட மேற்கூரை சேதமடைந்துள்ளது. பள்ளி விடுமுறை காலத்தில் பள்ளிகளை புனரமைக்க வேண்டும் என பெற்றோர் எதிர் பார்க்கின்றனர்.அரசு மேல்நிலை பள்ளியில் ஆயிரத்து 500 மாணவ, மாணவிகள் படித்த இடத்தில் தற்போது 400 பேர் மட்டுமே படிக்கின்றனர். பல ஆண்டுக்கு முன் கட்டிய இப்பள்ளி கட்டடத்தை தொடர்ந்து அரசு

காரைக்குடி : காரைக்குடி, முத்துப்பட்டிணம் மு.வி., அரசு மேல்நிலை பள்ளி கட்டட மேற்கூரை சேதமடைந்துள்ளது. பள்ளி விடுமுறை காலத்தில் பள்ளிகளை புனரமைக்க வேண்டும் என பெற்றோர் எதிர் பார்க்கின்றனர்.

அரசு மேல்நிலை பள்ளியில் ஆயிரத்து 500 மாணவ, மாணவிகள் படித்த இடத்தில் தற்போது 400 பேர் மட்டுமே படிக்கின்றனர். பல ஆண்டுக்கு முன் கட்டிய இப்பள்ளி கட்டடத்தை தொடர்ந்து அரசு பராமரிக்காமல்விட்டுவிட்டது. இதனால், தற்போது பெய்து வரும் மழைக்கு கட்டட மேற்கூரை சேதமடைந்து வருகின்றன. இதனால், பள்ளி காலங்களில் மாணவர்களுக்கு விபத்து ஏற்படும் அச்சம் பெற்றோரிடம் நிலவுகிறது. எனவே விடுமுறை காலத்திலேயே இப்பள்ளி கட்டடங்களை சீரமைக்க பொதுப்பணித்துறை நிர்வாகம் முன்வர வேண்டும்.

இது குறித்து காரைக்குடியை சேர்ந்த பழனியப்பன் கூறியதாவது, இப்பள்ளி கட்டடத்தை சீரமைக்க 2 ஆண்டாக அதிகாரிகளிடம் புகார் அளித்து வருகிறோம். சேதமான கட்டடத்தில் மழை நீர் தேங்கியுள்ளன. பள்ளி கட்டடம் இடிந்து விழும் முன், விடுமுறை காலத்திலேயே புனரமைக்க வேண்டும், என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X