பொது செய்தி

தமிழ்நாடு

அரசு பஸ்களில் கூடுதல் கட்டணம்

Added : நவ 21, 2020
Share
Advertisement
சிங்கம்புணரி : சிங்கம்புணரி வழியாக மதுரை செல்லும் அரசு பஸ்களில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதால் பயணிகள் அவதிக்கு உள்ளாகின்றனர்.வர்த்தக நகரமான சிங்கம்புணரியில் இருந்து தினமும் ஏராளமானோர் மதுரைக்கு சென்று வருகின்றனர். மதுரை, பொன்னமராவதி கிளைகளில் இருந்து பஸ்கள் இயக்கப்படுகின்றன. இந்நிலையில் பொன்னமராவதி அரசு போக்குவரத்து கழக கிளையில் இருந்து இயக்கப்படும் பஸ்களில்

சிங்கம்புணரி : சிங்கம்புணரி வழியாக மதுரை செல்லும் அரசு பஸ்களில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதால் பயணிகள் அவதிக்கு உள்ளாகின்றனர்.

வர்த்தக நகரமான சிங்கம்புணரியில் இருந்து தினமும் ஏராளமானோர் மதுரைக்கு சென்று வருகின்றனர். மதுரை, பொன்னமராவதி கிளைகளில் இருந்து பஸ்கள் இயக்கப்படுகின்றன. இந்நிலையில் பொன்னமராவதி அரசு போக்குவரத்து கழக கிளையில் இருந்து இயக்கப்படும் பஸ்களில் வழக்கமான கட்டணத்தை விட அதிக கட்டணம் வசூலிப்பதாக பயணிகள் புகார் தெரிவிக்கின்றனர்.

சிங்கம்புணரியில் இருந்து மதுரைக்கு வழக்கமான கட்டணம் ரூ.30. ஆனால் அதி வேக பஸ் எனக்கூறி ரூ.40 வசூலிக்கின்றனர். தற்போது பொன்னமராவதி கிளையில் இருந்து மதுரைக்கு இயங்கும் அனைத்து பஸ்களிலும், ரூ.40 கட்டணம் வசூலிக்கின்றனர். கொரோனாவின் தாக்கத்தால் ஏற்பட்ட பொருளாதார பாதிப்பில் இருந்து மீளமுடியாத பயணிகள் இக்கட்டண உயர்வால் கூடுதல் செலவை சந்திக்கின்றனர். அரசு போக்குவரத்து கழகம் பழைய கட்டணத்தையே வசூலிக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X