கோர்ட் செய்தி

தமிழ்நாடு

'பிக் பாஸ்' தர்ஷனுக்கு நிபந்தனை முன்ஜாமின்

Added : நவ 21, 2020
Share
Advertisement
சென்னை:மோசடி வழக்கில், 'பிக் பாஸ்' புகழ் தர்ஷனுக்கு, சென்னை உயர் நீதிமன்றம் நிபந்தனை முன்ஜாமின் வழங்கி உள்ளது.சென்னையில் வசித்து வரும், இலங்கையை சேர்ந்த தர்ஷன் தாக்கல் செய்த மனு:மாடலிங், சினிமா துறையில் ஏற்பட்ட ஆர்வத்தால், சென்னை வந்தேன். சனம் ஷெட்டியுடன் அறிமுகம் ஏற்பட்டது. இருவரும் வர்த்தக விளம்பரத்தில் நடித்துள்ளோம். ஒருவரை ஒருவர் விரும்பியதால், 2019 மே மாதம்,

சென்னை:மோசடி வழக்கில், 'பிக் பாஸ்' புகழ் தர்ஷனுக்கு, சென்னை உயர் நீதிமன்றம் நிபந்தனை முன்ஜாமின் வழங்கி உள்ளது.

சென்னையில் வசித்து வரும், இலங்கையை சேர்ந்த தர்ஷன் தாக்கல் செய்த மனு:மாடலிங், சினிமா துறையில் ஏற்பட்ட ஆர்வத்தால், சென்னை வந்தேன். சனம் ஷெட்டியுடன் அறிமுகம் ஏற்பட்டது. இருவரும் வர்த்தக விளம்பரத்தில் நடித்துள்ளோம். ஒருவரை ஒருவர் விரும்பியதால், 2019 மே மாதம், திருமண நிச்சயதார்த்தம் நடந்தது.

இருவரும், பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள விரும்பினோம். நான் தேர்வு செய்யப்பட்டேன்; சனம் தேர்வாகவில்லை. மூன்று மாதங்கள், பிக் பாஸ் அரங்கில் இருந்ததால், எனக்கும், சனத்துக்கும் இடையே இடைவெளி ஏற்பட்டது. நிகழ்ச்சியில் இருந்து வெளியே வந்த பின், என்னை, அவரது கட்டுப்பாட்டுக்குள் எடுக்க விரும்பினார்; உறவில் விரிசல் ஏற்பட்டது. எனக்கு எதிராக அவதுாறு கூறினார்.

பொய் குற்றச்சாட்டுக்களை கூறி, அடையாறு மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் என்னை அழைத்து விசாரித்தனர். தற்போது, பிக் பாஸ் நிகழ்ச்சியில் சனம் பங்கேற்றுள்ளார். டி.ஆர்.பி., எண்ணிக்கையை அதிகரிப்பதற்காக, எனக்கு அச்சுறுத்தல் விடுக்கிறார். மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில், புகார் தாக்கல் செய்தார்.

இதையடுத்து, மோசடி பிரிவு, பெண்கள் துன்புறுத்தல் தடுப்பு சட்டத்தின் கீழ், என் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. முறையாக விசாரணை நடத்தாமல், என்னை கைது செய்யப் போவதாக, போலீசார் அச்சுறுத்தல் விடுக்கின்றனர். எனவே, எனக்கு முன்ஜாமின் வழங்க வேண்டும். இவ்வாறு, மனுவில் கூறப்பட்டுள்ளது.

மனு, நீதிபதி ஜெகதீஷ் சந்திரா முன், விசாரணைக்கு வந்தது. தர்ஷனுக்கு முன்ஜாமின் வழங்கி, நீதிபதி உத்தரவிட்டார். இரு வாரங்கள், அடையாறு மகளிர் காவல்நிலையத்தில் ஆஜராகும்படியும் நிபந்தனை விதித்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X