கோர்ட் செய்தி

தமிழ்நாடு

காகித அளவில் 'இ -- சேவை' உயர் நீதிமன்றம் அதிருப்தி

Added : நவ 21, 2020
Share
Advertisement
சென்னை:அரசு, 'இ -- சேவை' வெறும் காகித அளவில் இருப்பதாக, சென்னை உயர் நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது.நீலகிரி மாவட்டம், மசினகுடியில் மதுக் கடைகள் துவங்க எதிர்ப்பு தெரிவித்து, உயர் நீதிமன்றத்தில், ஜெயினுலாபுதீன் என்பவர் வழக்கு தொடர்ந்தார். இம்மனு, நீதிபதிகள் சத்தியநாராயணன், ஹேமலதா அமர்வில், நேற்று விசாரணைக்கு வந்தது.டாஸ்மாக் நிர்வாகம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்

சென்னை:அரசு, 'இ -- சேவை' வெறும் காகித அளவில் இருப்பதாக, சென்னை உயர் நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது.

நீலகிரி மாவட்டம், மசினகுடியில் மதுக் கடைகள் துவங்க எதிர்ப்பு தெரிவித்து, உயர் நீதிமன்றத்தில், ஜெயினுலாபுதீன் என்பவர் வழக்கு தொடர்ந்தார். இம்மனு, நீதிபதிகள் சத்தியநாராயணன், ஹேமலதா அமர்வில், நேற்று விசாரணைக்கு வந்தது.

டாஸ்மாக் நிர்வாகம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் சதீஷ், ''மனுதாரர் குறிப்பிட்டுள்ள பகுதியில், மதுக்கடை திறக்கும் திட்டம் இல்லை,'' என்றார். செப்டம்பரில் அளித்த மனு மீது உத்தரவு பிறப்பிக்காததால், இந்த வழக்கை தாக்கல் செய்ததாக, மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, 'பொதுமக்களின் மனுக்களுக்கு, அதிகாரிகள் உடனடியாக பதில் அளிப்பது இல்லை. மக்களின் கோரிக்கைகளுக்கு, உடனடி பதில் அளித்தால், அதிக அளவில் வழக்குகள் தாக்கல் செய்யும் நிலை இருக்காது. குறைகளுக்கு தீர்வு காண, அரசு அறிமுகப்படுத்திய இ -- சேவை, காகித அளவில் உள்ளது' என, நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்தனர்.பின் வழக்கு விசாரணையை முடித்து வைத்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X