சம்பவம் செய்தி

தமிழ்நாடு

வங்கி ஊழியரை குத்தி மொபைல் போன் பறிப்பு

Added : நவ 21, 2020
Share
Advertisement
மாங்காடு : வண்டலுார் - மீஞ்சூர் வெளிவட்ட சாலையில், தனியார் வங்கி ஊழியரை கத்தியால் குத்தி, மொபைல் போன் பறித்துச் சென்ற மர்ம நபர்களை, போலீசார் தேடி வருகின்றனர். திருவள்ளுர், தேவர் நகர், பாரதியார் தெருவைச் சேர்ந்தவர் பிரசாத் பாபு, 35; தனியார் வங்கி ஊழியர். நேற்று முன்தினம் இரவு, இருசக்கர வாகனத்தில், வண்டலுார் - மீஞ்சூர் வெளிவட்ட சாலையில் சென்றார்.மாங்காடு அருகே சென்றபோது,

மாங்காடு : வண்டலுார் - மீஞ்சூர் வெளிவட்ட சாலையில், தனியார் வங்கி ஊழியரை கத்தியால் குத்தி, மொபைல் போன் பறித்துச் சென்ற மர்ம நபர்களை, போலீசார் தேடி வருகின்றனர்.

திருவள்ளுர், தேவர் நகர், பாரதியார் தெருவைச் சேர்ந்தவர் பிரசாத் பாபு, 35; தனியார் வங்கி ஊழியர். நேற்று முன்தினம் இரவு, இருசக்கர வாகனத்தில், வண்டலுார் - மீஞ்சூர் வெளிவட்ட சாலையில் சென்றார்.மாங்காடு அருகே சென்றபோது, இருசக்கர வாகனத்தில், பெட்ரோல் தீர்ந்துவிட்டது. அணுகுசாலை வழியாக, வாகனத்தை தள்ளி சென்ற போது, அவ்வழியாக, இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் மூன்று பேர், பிரசாத் பாபுவை வழிமறித்து, மொபைல் போனை பறிக்க முயன்றனர்.

பிரசாத் பாபு, மொபைல் போனை தர மறுத்தார். ஆத்திரமடைந்த மர்ம நபர்கள், மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து, அவர் வயிற்றில் குத்திவிட்டு, போனை பறித்துச் சென்றனர். காயமடைந்த பிரசாத் பாபுவை, அவ்வழியாக சென்ற வாகன ஓட்டிகள் மீட்டு, பூந்தமல்லி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் குறித்து, மாங்காடு போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X