பொது செய்தி

தமிழ்நாடு

சிவகங்கை டூ ஐக்கிய நாடுகள் சபை: விசாரணை அதிகாரியான பெண்

Added : நவ 21, 2020 | கருத்துகள் (2)
Share
Advertisement
சிவகங்கை : ஐ.நா., சபையின் 'சைபர் கிரைம்' குற்றங்களை கண்டறியும் பிரிவில் விசாரணை அதிகாரியாக சிவகங்கையை சேர்ந்த பெண் ராமலட்சுமி 26, பணிபுரிகிறார்.கல்லல் அருகே செம்பனுார் வடிவாம்பிகை மில்ஸ் உரிமையாளர் சுப்பிரமணியன், முத்துஆச்சி தம்பதியின் 3 வது மகள் ராமலட்சுமி. இவர் மதுரை மகாத்மா இன்டர்நேஷனல் பள்ளியில்பிளஸ் 2 படித்தார்.இளங்கலை, முதுகலை அறிவியல் பட்டத்தை லண்டனில்
 சிவகங்கை டூ ஐக்கிய நாடுகள் சபை:  விசாரணை அதிகாரியான பெண்

சிவகங்கை : ஐ.நா., சபையின் 'சைபர் கிரைம்' குற்றங்களை கண்டறியும் பிரிவில் விசாரணை அதிகாரியாக சிவகங்கையை சேர்ந்த பெண் ராமலட்சுமி 26, பணிபுரிகிறார்.

கல்லல் அருகே செம்பனுார் வடிவாம்பிகை மில்ஸ் உரிமையாளர் சுப்பிரமணியன், முத்துஆச்சி தம்பதியின் 3 வது மகள் ராமலட்சுமி. இவர் மதுரை மகாத்மா இன்டர்நேஷனல் பள்ளியில்பிளஸ் 2 படித்தார்.இளங்கலை, முதுகலை அறிவியல் பட்டத்தை லண்டனில் முடித்தார். முதுகலை படிப்பில் கல்லுாரியில் முதல்தரத்தில் தேர்ச்சி பெற்றார்.

முதற்கட்டமாக துபாயில் உள்ள 'டிலாய்ட்டி'கம்பெனியில் கம்ப்யூட்டர் வழி சைபர் குற்றப்பிரிவில் விசாரணை அதிகாரியாக பணிபுரிந்தார். கணினி வழி குற்றங்களை கண்டறிவதில், நேர்த்தியாக இவர் பணிபுரிந்ததால், இவரது திறனை பார்த்த ஐக்கிய நாடுகள் சபை, அங்குள்ள கம்ப்யூட்டர் வழி குற்றங்களை கண்டறியும் பிரிவில் விசாரணை அதிகாரியாக நியமித்தது.

சிவகங்கையை சேர்ந்த பெண் ஐக்கிய நாடுகள் சபையில் பணிபுரிவதை வரவேற்றுள்ளனர். அவரது தந்தை சுப்பிரமணியன் கூறியதாவது, இளம் வயதிலேயே தன் சொந்த திறமையால்,எந்தவித சிபாரிசும் இன்றி ஐக்கிய நாடுகள் சபையில் விசாரணை அதிகாரியாக சேர்ந்தார். கம்ப்யூட்டர் வழி குற்றங்களை கண்டறிவதில் அவருக்கு ஆர்வம் அதிகம்.இதனால், தனக்கு பிடித்த பணியை சந்தோஷமாக செய்கிறார். இவரை போன்று இளைஞர்கள், பெண்கள் சாதிக்கவேண்டும் என ஆசைப் படுகிறேன், என்றார்.

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
21-நவ-202021:05:21 IST Report Abuse
theruvasagan தன் உழைப்பால் திறமையால் முன்னுக்கு வந்தவராக காணப்படுகிறார். வாழ்த்துக்கள்.
Rate this:
Cancel
21-நவ-202015:25:10 IST Report Abuse
Vishnu Kumar good God bless you madam. jai hind
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X