சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கணவர் குடும்பத்தை தீர்த்துக் கட்டியது ஏன்? போலீசில் சிக்கிய ஜெயமாலா வாக்குமூலம்!

Added : நவ 21, 2020
Share
Advertisement
சென்னை : 'என் வாழ்வை சீரழித்த கணவர், மாமனார், மாமியாரை, பணத்திற்காக தீர்த்துக் கட்டினோம்' என, துப்பாக்கிச் சூடு வழக்கில் கைது செய்யப்பட்ட ஜெயமாலா, வாக்குமூலம் அளித்துள்ளார். சென்னை, சவுகார்பேட்டையில், தலித் சந்த், 74, இவரது மனைவி புஷ்பா பாய், 70, மகன் ஷீத்தல் குமார், 40 ஆகியோர், நவ., 11ல், துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டனர். கைது இச்சம்பவத்தில், ஷீத்தல் குமாரின் மனைவி

சென்னை : 'என் வாழ்வை சீரழித்த கணவர், மாமனார், மாமியாரை, பணத்திற்காக தீர்த்துக் கட்டினோம்' என, துப்பாக்கிச் சூடு வழக்கில் கைது செய்யப்பட்ட ஜெயமாலா, வாக்குமூலம் அளித்துள்ளார்.

சென்னை, சவுகார்பேட்டையில், தலித் சந்த், 74, இவரது மனைவி புஷ்பா பாய், 70, மகன் ஷீத்தல் குமார், 40 ஆகியோர், நவ., 11ல், துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டனர். கைது இச்சம்பவத்தில், ஷீத்தல் குமாரின் மனைவி ஜெயமாலா மற்றும் அவரது சகோதரர்கள் கைலாஷ், விலாஷ் உள்ளிட்ட ஆறு பேர் ஈடுபட்டது போலீசாருக்குத் தெரிய வந்தது. மஹாராஷ்டிரா மாநிலம், புனேவில் இருந்து, சோலாப்பூருக்கு காரில் தப்பிய கைலாஷ் உள்ளிட்ட மூன்று பேரை, போலீசார் கைது செய்தனர். இந்நிலையில், டில்லி அருகே, ஆக்ராவில் பதுங்கி இருந்த ஜெயமாலா, 38, விலாஷ், 28, ராஜிவ் ஷிண்டே, 28 ஆகியோரை, நேற்று முன்தினம் போலீசார் கைது செய்தனர்.

அவர்கள், விமானம் வாயிலாக சென்னை அழைத்து வரப்படுகின்றனர்.போலீசாரிடம், ஜெயமாலா அளித்து உள்ள வாக்குமூலம்:என் மாமனார், மாமியார் செய்யும் கொடுமைகளை, என் கணவர் கண்டிக்க மாட்டார். என் மீது தான் குறை சொல்வார். இது எனக்கு பிடிக்கவில்லை. கணவருக்கு, தெளிவான மன நிலையும் கிடையாது. என்னை ஏமாற்றி திருமணம் செய்து, வாழ்வை சீரழித்துவிட்டனர். இதற்கெல்லாம், என் மாமனார் தான் காரணம். அவர், பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்து வந்தார். இது பற்றி, என் மாமியாரிடம் தெரிவித்தேன். என் மீதே பழி சுமத்தினார்.

இதனால், நரகத்தில் இருப்பது போல உணர்ந்தேன். ஒரு கட்டத்தில், என்னால் கணவர் வீட்டில் இருக்கவே முடியாத நிலைக்கு தள்ளப்பட்டேன். எதிர்காலம்அதனால், இரு மகள்களுடன், என் பெற்றோர் வீட்டிற்கு சென்றுவிட்டேன். என் குழந்தைகளின் எதிர்காலம் கருதி, புனேவில் உறவினர்கள் மத்தியில், பலமுறை பேச்சு நடந்தது. மாமனார் மற்றும் கணவரிடம், 7 கோடி ரூபாய் கேட்டோம். ஒரு பைசா கூட தர முடியாது என, கூறிவிட்டனர்.பலமுறை கேட்டும், பணம் கொடுக்கவில்லை. என் சகோதரர் விலாஷ் வழக்கறிஞர் என்பதால், இவர் வாயிலாக, ஓய்வு பெற்ற ராணுவம் மற்றும் விமானப்படை அதிகாரிகள் வாயிலாக, இரண்டு துப்பாக்கிகளை வாங்கி, கணவர் உள்ளிட்ட மூன்று பேரையும் சுட்டுக் கொன்றோம்.

இவர்களின், நான்கு வங்கிக் கணக்கில் இருந்து, 1.5 லட்சம் ரூபாய், வீட்டில் இருந்த, நான்கு தங்க வளையல்களையும் திருடிச் சென்றோம்.இவ்வாறு, அவர் வாக்குமூலம் அளித்துள்ளார். ஆக்ராவில், ஒரு ஓட்டலில் அவர் தங்கி இருந்தபோது, பதற்றத்தில் கை தவறி, மொபைல் போனில், 'கால் பட்டனை' அழுத்தி உள்ளார். இதன் அடிப்படையில், போலீசார், மொபைல் போன் டவர் சிக்னல் வாயிலாக, அவரை கைது செய்தனர். பின், ஜெயமாலாவை பேச வைத்து, விலாஷ் மற்றும் ராஜிவ் ஷிண்டே ஆகியோரை பிடித்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X