பொது செய்தி

தமிழ்நாடு

டாக்டர் பற்றாக்குறையால் நோயாளிகள் தவிப்பு

Added : நவ 21, 2020
Share
Advertisement
காரைக்குடி : காரைக்குடி அரசு மருத்துவமனையில் டாக்டர்கள் பற்றாக்குறையால் உரிய நேரத்தில் சிகிச்சை பெற முடியாமல் நோயாளிகள் தவிக்கின்றனர்.காரைக்குடி அரசு மருத்துவமனையில் 300 வெளிநோயாளிகள் சிகிச்சை பெற்று செல்கின்றனர். அவசர சிகிச்சை பிரிவிற்கு புதுக்கோட்டை, காரைக்குடி, சாக்கோட்டை விபத்தில் சிக்குவோர் அதிகம் வருகின்றனர். இங்கு 44 டாக்டர்கள் பணிபுரிய வேண்டும். ஆனால், 24

காரைக்குடி : காரைக்குடி அரசு மருத்துவமனையில் டாக்டர்கள் பற்றாக்குறையால் உரிய நேரத்தில் சிகிச்சை பெற முடியாமல் நோயாளிகள் தவிக்கின்றனர்.

காரைக்குடி அரசு மருத்துவமனையில் 300 வெளிநோயாளிகள் சிகிச்சை பெற்று செல்கின்றனர். அவசர சிகிச்சை பிரிவிற்கு புதுக்கோட்டை, காரைக்குடி, சாக்கோட்டை விபத்தில் சிக்குவோர் அதிகம் வருகின்றனர். இங்கு 44 டாக்டர்கள் பணிபுரிய வேண்டும். ஆனால், 24 பேர் மட்டுமே உள்ளனர்.போதிய நர்ஸ், சுகாதார பணியாளர்கள் இல்லை. இதனால், விபத்தில் சிக்குவோருக்கு உடனடி சிகிச்சை அளிக்க டாக்டர்கள் இன்றி, மதுரை,சிவகங்கைக்கு அனுப்புகின்றனர்.மேலும் மருத்துவமனை வளாகத்தில் வெளி நோயாளிகள், உள் நோயாளிகளின் உறவினர்கள் வசதிக்கென போதிய உணவு விடுதி இல்லை. இங்கு அம்மா உணவகம் திறக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X