பொது செய்தி

தமிழ்நாடு

வெங்காயத்தில் அடி அழுகல் நோய்

Added : நவ 21, 2020
Share
Advertisement
திருப்புவனம்: வெங்காயத்தில் அடி அழுகல் நோயை கட்டுப்படுத்த தோட்டக்கலை உதவி இயக்குனர் பாண்டியராஜன் ஆலோசனை வழங்கியுள்ளார்.அவர் கூறியதாவது, திருப்புவனம் வட்டாரத்தில் செங்குளம், பறையங்குளம், முக்குடி, எருக்களவெள்ளூர் கிராமங்களில் சின்னவெங்காயம் சாகுபடி செய்துள்ளனர். தற்போது பெய்யும் மழைக்கு வெங்காயத்தில் அடி அழுகல் நோய் ஏற்படுகிறது. இந்நோயை கட்டுப்படுத்த வடிகால்

திருப்புவனம்: வெங்காயத்தில் அடி அழுகல் நோயை கட்டுப்படுத்த தோட்டக்கலை உதவி இயக்குனர் பாண்டியராஜன் ஆலோசனை வழங்கியுள்ளார்.

அவர் கூறியதாவது, திருப்புவனம் வட்டாரத்தில் செங்குளம், பறையங்குளம், முக்குடி, எருக்களவெள்ளூர் கிராமங்களில் சின்னவெங்காயம் சாகுபடி செய்துள்ளனர். தற்போது பெய்யும் மழைக்கு வெங்காயத்தில் அடி அழுகல் நோய் ஏற்படுகிறது. இந்நோயை கட்டுப்படுத்த வடிகால் வசதியுள்ள நிலத்தை பயன்படுத்த வேண்டும். ஒருகிலோ விதை வெங்காயத்துடன் 10 கிராம் சூடோமோனஸ் அல்லது 4 கிராம் ட்ரைகோடொமா விரிடி கலந்து ஒரு நாள் முழுவதும் ஊறவைத்து விதைக்க வேண்டும். கடைசி உழவின் போது ஒரு கிலோ சூடோமோனஸ் அல்லது ஒரு கிலோ ட்ரைகோடொமா விரிடி, ஐந்து கிலோ வேம்பு உயிர் பூஞ்சான் கொல்லி, 100கிலோ தொழு உரத்தோடு கலந்துவிடவும், என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X