கூவம் ஆக்கிரமிப்புகள் அகற்றம் நாவலுாரில் மாற்று இடம்| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கூவம் ஆக்கிரமிப்புகள் அகற்றம் நாவலுாரில் மாற்று இடம்

Added : நவ 21, 2020
Share
அம்பத்துார் : கூவம் நதி சீரமைப்பு திட்டத்தில், அதன் கரையோர ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு, அங்கு வசித்தவர்களுக்கு, நாவலுாரில் மாற்று குடியிருப்புகள் வழங்கப்பட்டன. சென்னை, அம்பத்துார் மண்டலம், 93வது வார்டு, பாடிக்குப்பம், ரயில் நகர் பகுதிகளை ஒட்டிய, கூவம் நதி கரையை ஆக்கிரமித்து, 221 குடும்பத்தினர், குடிசை மற்றும் சிமென்ட் ஓடுகள் கொண்ட வீடுகள் கட்டி வசித்து

அம்பத்துார் : கூவம் நதி சீரமைப்பு திட்டத்தில், அதன் கரையோர ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு, அங்கு வசித்தவர்களுக்கு, நாவலுாரில் மாற்று குடியிருப்புகள் வழங்கப்பட்டன.

சென்னை, அம்பத்துார் மண்டலம், 93வது வார்டு, பாடிக்குப்பம், ரயில் நகர் பகுதிகளை ஒட்டிய, கூவம் நதி கரையை ஆக்கிரமித்து, 221 குடும்பத்தினர், குடிசை மற்றும் சிமென்ட் ஓடுகள் கொண்ட வீடுகள் கட்டி வசித்து வந்தனர்.கூவம் நதி சீரமைப்பு திட்டத்தின் கீழ், ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி, நேற்று முன்தினம் முதல் நடந்து வருகிறது. நேற்று வரை, 100க்கும் மேற்பட்ட ஆக்கிரமிப்பு வீடுகள் அகற்றப்பட்டன. மற்ற வீடுகளை அகற்றும் பணி தொடர்கிறது.ஆக்கிரமிப்பு அகற்றும் பணியில், பொதுப்பணித்துறை, சென்னை மாநகராட்சி மற்றும் குடிசை மாற்று வாரியத்தினர் ஈடுபட்டுள்ளனர்.

அங்கு வசித்த, 221 வீடுகளைச் சேர்ந்த குடும்பத்தினருக்கும், படப்பை, நாவலுாரில், குடிசை மாற்று வாரியம் மூலம் கட்டப்பட்டுள்ள வீடுகள் ஒதுக்கப்பட்டுள்ளன.மாற்று இடம் வழங்கப்பட்டவர்களுக்கான உணவு மற்றும் போக்குவரத்து ஏற்பாடுகளை, சென்னை மாநகராட்சி செய்துள்ளது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X