கால்நடை மருத்துவமனைக்கு தேவை கூடுதல் கட்டடம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

கால்நடை மருத்துவமனைக்கு தேவை கூடுதல் கட்டடம்

Added : நவ 21, 2020
Share
திருப்புவனம் : திருப்புவனம் அரசு கால்நடை மருத்துவமனையில் கட்டடம் பழுதடைந்துள்ளதால், மழையில் நனைந்தபடியே கால்நடைகளுக்கு சிகிச்சையளிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.திருப்புவனம், பிரமனுார் ரோட்டில் கால்நடை மருத்துவமனை உள்ளது. தினமும் ஏராளமான கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.கால்நடைகளுக்கு அறுவை சிகிச்சை செய்ய கட்டட வசதி இன்றி, வெட்ட வெளியில்

திருப்புவனம் : திருப்புவனம் அரசு கால்நடை மருத்துவமனையில் கட்டடம் பழுதடைந்துள்ளதால், மழையில் நனைந்தபடியே கால்நடைகளுக்கு சிகிச்சையளிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

திருப்புவனம், பிரமனுார் ரோட்டில் கால்நடை மருத்துவமனை உள்ளது. தினமும் ஏராளமான கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.கால்நடைகளுக்கு அறுவை சிகிச்சை செய்ய கட்டட வசதி இன்றி, வெட்ட வெளியில் மேற்கொள்ளப்படுகிறது. தற்போது மழை காலம் என்பதால் கால்நடைகளுக்கு கொட்டும் மழையில் சிகிச்சை அளிக்கின்றனர்.கால்நடை மருந்தகத்திற்கு அருகில் பழைய கட்டடம் சிதிலமடைந்து காணப்படுகிறது. அதனை அகற்றி விட்டு புதியகட்டடம் கட்ட கால்நடை வளர்ப்போர் புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை. இங்கு கூடுதல் கட்டடம் கட்ட வேண்டும்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X