பொது செய்தி

தமிழ்நாடு

தொடர் மழை: விவசாய பணி மும்முரம்

Added : நவ 21, 2020
Share
Advertisement
திருப்புத்துார் : திருப்புத்துார் பகுதியில் கடந்த ஒரு வாரமாக நல்ல மழை பெய்து வருவதால் விவசாயிகள் பணிகளில் மும்முரம் காட்டியுள்ளனர்.திருப்புத்துார் பகுதிகளில் கடந்த ஒரு வாரமாக மழை முகம் காட்டியதை அடுத்து வயல்களில் விவசாயிகள் உரம் போடுதல், களை எடுத்தல், நாற்று நடவு என்று பல பணிகளில் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கருகும் நிலையில் இருந்த பயிர்கள் தற்போது உயிர் பெற்று

திருப்புத்துார் : திருப்புத்துார் பகுதியில் கடந்த ஒரு வாரமாக நல்ல மழை பெய்து வருவதால் விவசாயிகள் பணிகளில் மும்முரம் காட்டியுள்ளனர்.

திருப்புத்துார் பகுதிகளில் கடந்த ஒரு வாரமாக மழை முகம் காட்டியதை அடுத்து வயல்களில் விவசாயிகள் உரம் போடுதல், களை எடுத்தல், நாற்று நடவு என்று பல பணிகளில் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கருகும் நிலையில் இருந்த பயிர்கள் தற்போது உயிர் பெற்று வருகின்றன. இருப்பினும் ஆடியில் முன்னதாக விதைத்தவர்கள் பலரும் பயிர்கள் கருகி விட்டதாக கூறுகின்றனர். இருப்பினும் ஒரே நேரத்தில் விவசாய வேலைகள் நடப்பதால் தொழிலாளர்கள் பற்றாக்குறையும் ஏற்பட்டுள்ளது.

மேலும் கூட்டுறவு சங்கங்களில் மூடைக் கணக்கில் எடுக்கும் விவசாயிகள் எளிதாக உரம் வாங்க முடிகிறது. சில்லறையாக வாங்கும் விவசாயிகள் நகர் புறங்களுக்கு சென்று கிலோ கணக்கில் கூடுதல் விலைக்கு வாங்க வேண்டியுள்ளது. மொத்தத்தில் தற்போதைய மழைவிவசாயிகளை உற்சாகப்படுத்தியுள்ளது.இருப்பினும் கண்மாய்களில் பெருமளவு தண்ணீர் இல்லை. சில நாட்கள் தேவைக்கே உள்ளது. மேலும் இரு மழை நன்றாக பெய்தால் முழுமையான விளைச்சலை பெற முடியும் என்று நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X