சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ரூ.20 ஆயிரம் லஞ்சம் பெற்ற வாரிய ஓய்வு அதிகாரி கைது

Added : நவ 21, 2020
Share
Advertisement
சென்னை:விற்பனை பத்திரத்தை தர, குடிசை மாற்று வாரிய அதிகாரிக்கு, 20 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கி கொடுத்த, ஓய்வு பெற்ற இளநிலை உதவியாளரை, லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.சென்னை, தேனாம்பேட்டையில் உள்ள, தமிழ்நாடு குடிசை மாற்று வாரிய எஸ்டேட் அதிகாரியாக, குணசேகரன் என்பவர் பணியாற்றி வருகிறார். இவர், லஞ்ச பணம் வாங்கி கொடுப்பதற்காக, இந்த அலுவலகத்தில் வேலை பார்த்த, ஓய்வு இளநிலை

சென்னை:விற்பனை பத்திரத்தை தர, குடிசை மாற்று வாரிய அதிகாரிக்கு, 20 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கி கொடுத்த, ஓய்வு பெற்ற இளநிலை உதவியாளரை, லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.

சென்னை, தேனாம்பேட்டையில் உள்ள, தமிழ்நாடு குடிசை மாற்று வாரிய எஸ்டேட் அதிகாரியாக, குணசேகரன் என்பவர் பணியாற்றி வருகிறார். இவர், லஞ்ச பணம் வாங்கி கொடுப்பதற்காக, இந்த அலுவலகத்தில் வேலை பார்த்த, ஓய்வு இளநிலை உதவியாளர் வேலாயுதம் என்பவரை, சட்ட விரோதமாக பணியில் அமர்த்தியுள்ளார்.

இந்நிலையில், விற்பனை பத்திரம் தொடர்பாக, தன்னை அணுகிய நபர் ஒருவரிடம், 'வேலாயுதத்திடம், 20 ஆயிரம் ரூபாய் லஞ்சமாக கொடுங்கள்; அந்த ரூபாயை வாங்கிக் கொள்கிறேன்' என, குணசேகரன் கூறியுள்ளார். பணம் கொடுக்க விரும்பாத அந்த நபர், சென்னை, ஆலந்துாரில் உள்ள, லஞ்ச ஒழிப்பு துறை அலுவலகத்தில் புகார் அளித்தார்.

இதையடுத்து, லஞ்ச ஒழிப்பு போலீசார், ரசாயன பொடி தடவிய ரூபாயை, அந்த நபரிடம் கொடுத்து அனுப்பினர். அந்த ரூபாயை, குடிசை மாற்று வாரிய எஸ்டேட் அலுவலகத்தில், வேலாயுதம் பெற்ற போது, கையும் களவுமாக, லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர். குணசேகரனிடம் விசாரித்து வருகின்றனர்.

அதேபோல, கன்னியாகுமரி மாவட்டம், மார்த்தாண்டம், வட்டார போக்குவரத்து அலுவலகத்தில், மோட்டார் வாகன ஆய்வாளர் பெருமாள் காரில் பதுக்கி இருந்த, 1.69 லட்சம் ரூபாயை, லஞ்ச ஒழிப்பு போலீசார், நேற்று முன்தினம் பறிமுதல் செய்தனர்.

தேனி மாவட்டம், சின்னமனுார் பத்திரப்பதிவு அலுவலகத்தில் சோதனை நடத்தி,22 ஆயிரம் ரூபாயை கைப்பற்றினர். தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் சார் - பதிவாளர் அலுவலகத்தில் சோதனை நடத்திய, லஞ்ச ஒழிப்பு போலீசார், 42 ஆயிரம் ரூபாயை பறிமுதல் செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X