பொது செய்தி

தமிழ்நாடு

கொரோனாவால் களையிழந்த சூரசம்ஹாரம்

Added : நவ 21, 2020
Share
Advertisement
சென்னை : கொரோனா தொற்று காரணமாக, பிரசித்தி பெற்ற முருகப் பெருமான் கோவில்களில், சூரசம்ஹார வைபவம் பக்தர்கள் இன்றி நடந்தது. கந்த சஷ்டி என்பது முருகப் பெருமான், சூரபத்மன் எனும் அரக்கனை வதம் செய்து, அரவணைத்துக் கொண்ட நாள். இது, சைவ சமயத்தவர்கள் பெருமையுடன் கொண்டாடும் ஒரு விழா.சஷ்டி என்றால் ஆறு எனப்படும். ஐப்பசி மாதம் சுக்லபட்ச பிரதமையின் முதல் ஆறு நாட்கள் கந்த சஷ்டி காலம்

சென்னை : கொரோனா தொற்று காரணமாக, பிரசித்தி பெற்ற முருகப் பெருமான் கோவில்களில், சூரசம்ஹார வைபவம் பக்தர்கள் இன்றி நடந்தது.

கந்த சஷ்டி என்பது முருகப் பெருமான், சூரபத்மன் எனும் அரக்கனை வதம் செய்து, அரவணைத்துக் கொண்ட நாள். இது, சைவ சமயத்தவர்கள் பெருமையுடன் கொண்டாடும் ஒரு விழா.சஷ்டி என்றால் ஆறு எனப்படும். ஐப்பசி மாதம் சுக்லபட்ச பிரதமையின் முதல் ஆறு நாட்கள் கந்த சஷ்டி காலம் ஆகும். இந்த ஆறு நாட்களும், விரத நாட்களாக கடைப்பிடிக்கப் படுகிறது.கந்த சஷ்டியின் பிரதான நாளான சூரசம்ஹாரம், நேற்று சென்னை, புறநகரில் உள்ள முருகன் கோவில்களில் பக்தர்கள் இன்றி நடந்தது.

வடபழநி ஆண்டவர் கோவிலில், கும்பாபிஷேக திருப்பணியை முன்னிட்டு, பாலாலய பிரதிஷ்டை செய்யப்பட்டதால், சூரசம்ஹார வைபவம் நடக்கவில்லை.இருப்பினும், காலை, 6:00 மணிக்கு நடை திறக்கப்பட்டது. சுவாமிக்கு சிறப்பு அபிஷேக அலங்காரங்கள் நடந்தன. இரவு வரை முருகப்பெருமான் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.மயிலாப்பூர் கபாலீஸ்வரர்கோவிலில் இரவு, 7:00 மணிக்கு சூரசம்ஹாரம் துவங்கியது. முருகப் பெருமான், படை சூழ, யானை, சிங்கம், ஆடு உள்ளிட்ட ரூபங்களில் வந்த சூரபத்மனை வேலால் வதம் செய்யும் காட்சி அரங்கேறியது.

பின், மாமரமாக மாறிய சூரன், அதை பிளந்தபோது, சேவல், மயிலாக மாறிய காட்சி நடந்தது. இந்த வைபவத்தில், பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை.அவர்கள் வசதிக்காக, 'ஆன்-லைன்' மூலம் ஒளிபரப்பு செய்யப்பட்டது.இன்று இரவு, 7:00 மணிக்கு திருக்கல்யாண உற்சவம் நடக்கிறது.கொரோனா தொற்று காரணமாக, பிரசித்தி பெற்ற முருகப் பெருமான் கோவில்களில், பக்தர்கள் இன்றி சூரசம்ஹார வைபவம் நடந்தது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X