பொது செய்தி

தமிழ்நாடு

நாளை ஊடகவியலாளர் நல சங்க மாநாடு

Added : நவ 21, 2020
Share
Advertisement
சென்னை:தேசிய ஊடகவியலாளர் நலச்சங்கத்தின் முதல் மாநில மாநாடு, திருச்சியில் நாளை நடக்க உள்ளது. தேசிய ஊடகவியலாளர் நலச் சங்கத்தின் முதல் மாநில மாநாடு, திருச்சி இந்திரா காந்தி கல்லுாரியில், நாளை காலை, 10:00 மணிக்கு, கொடியேற்றத்துடன் துவங்குகிறது. பாகிஸ்தான் பயங்கரவாதிகளால் சுடப்பட்டு, தப்பிய கோபாலகிருஷ்ணன் கொடியேற்றுகிறார். இந்திரா காந்தி கல்வி குழும செயலர் மீனா,

சென்னை:தேசிய ஊடகவியலாளர் நலச்சங்கத்தின் முதல் மாநில மாநாடு, திருச்சியில் நாளை நடக்க உள்ளது.

தேசிய ஊடகவியலாளர் நலச் சங்கத்தின் முதல் மாநில மாநாடு, திருச்சி இந்திரா காந்தி கல்லுாரியில், நாளை காலை, 10:00 மணிக்கு, கொடியேற்றத்துடன் துவங்குகிறது. பாகிஸ்தான் பயங்கரவாதிகளால் சுடப்பட்டு, தப்பிய கோபாலகிருஷ்ணன் கொடியேற்றுகிறார். இந்திரா காந்தி கல்வி குழும செயலர் மீனா, விளக்கேற்றுகிறார். அமைச்சர்கள் நடராஜன், வளர்மதி ஆகியோர் பங்கேற்கின்றனர்.

*காலை, 10:30 முதல், 12:00 மணி வரை, சங்க செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் நடக்க உள்ளது. இக்கூட்டத்திற்கு, சங்க காப்பாளரான, 'தினமலர்' நாளிதழின் திருச்சி பதிப்பு வெளியீட்டாளர், ராமசுப்பு தலைமை வகிக்க உள்ளார்

* பகல், 2:00 மணி முதல், மாலை, 4:00 மணி வரை, தேசியம் சார்ந்த கலை நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இதற்கு, பா.ஜ., கலை இலக்கிய பிரிவு தலைவர் காயத்திரி ரகுராம் தலைமை வகிக்கிறார்

*மாலை, 4:00 முதல், இரவு, 7:00 மணி வரை, 'ஊடகத்தில் தேசியம்' என்ற, மாநாடு நடக்க உள்ளது. மாநாட்டிற்கு, சங்கத்தின் கவுரவத் தலைவரான தேவநாதன் யாதவ், தலைமை வகிக்கிறார். செய்தித்துறை அமைச்சர் ராஜு, பா.ஜ., மூத்த தலைவர் எச்.ராஜா, பா.ஜ., தேசிய மகளிர் அணி தலைவி வானதி சீனிவாசன் ஆகியோர், சிறப்பு விருந்தினராக பங்கேற்க உள்ளனர். மேலும், காங்கிரஸ் உட்பட பல்வேறு கட்சி தலைவர்களும், பங்கேற்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X