கோர்ட் செய்தி

தமிழ்நாடு

நடிகை புகைப்படம் வெளியிட முன்னாள் நண்பருக்கு தடை

Added : நவ 21, 2020
Share
Advertisement
சென்னை:நடிகை அமலாபால் நிச்சயதார்த்த புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட, அவரது முன்னாள் நண்பருக்கு, சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.மைனா படத்தில் நடித்து பிரபலமானவர் நடிகை அமலாபால்; நடிகர்கள் தனுஷ், விஜய் உள்ளிட்ட பிரபலங்களுடன் சேர்ந்து நடித்துள்ளார். இயக்குனர் விஜய் உடனான திருமணம், பின்னர் விவாகரத்தில் முடிந்தது.மும்பையை சேர்ந்த பவ்னிந்தர் சிங்

சென்னை:நடிகை அமலாபால் நிச்சயதார்த்த புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட, அவரது முன்னாள் நண்பருக்கு, சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

மைனா படத்தில் நடித்து பிரபலமானவர் நடிகை அமலாபால்; நடிகர்கள் தனுஷ், விஜய் உள்ளிட்ட பிரபலங்களுடன் சேர்ந்து நடித்துள்ளார். இயக்குனர் விஜய் உடனான திருமணம், பின்னர் விவாகரத்தில் முடிந்தது.மும்பையை சேர்ந்த பவ்னிந்தர் சிங் என்பவருக்கும், நடிகை அமலாபாலுக்கும், 2019ல், ராஜஸ்தான் மாநிலத்தில், திருமணத்துக்கான நிச்சயதார்த்தம் நடந்தது. பின், இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால், திருமணம் நடக்கவில்லை.

நிச்சயதார்த்த நிகழ்ச்சியின் போது, அமலாபால் உடன் சேர்ந்து எடுத்த புகைப்படங்களை, சமூக வலைதளங்களில் பவ்னிந்தர் சிங் வெளியிட்டார். இதற்கு அமலாபால் எதிர்ப்பு தெரிவிக்கவே, அவற்றை நீக்கி விட்டார்.
இதையடுத்து, உயர் நீதிமன்றத்தில் அமலாபால் தாக்கல் செய்த மனுவில், 'என் நண்பராக இருந்த பவ்னிந்தர் சிங், என்னுடன் சேர்ந்து எடுத்த புகைப்படங்களையும், நிச்சயதார்த்த நிகழ்ச்சியில் எடுக்கப்பட்ட புகைப்படங்களையும் வெளியிட தடை விதிக்க வேண்டும். உரிய இழப்பீடு வழங்க வேண்டும்' என, கூறியுள்ளார்.

இம்மனு, நீதிபதி சதீஷ்குமார் முன், நேற்று விசாரணைக்கு வந்தது. அமலாபால் புகைப் படங்களை, சமூக வலைதளங்களில் வெளியிட, பவ்னிந்தர் சிங்க்கு நீதிபதி தடை விதித்தார். மனுவுக்கு பதில் அளிக்கும்படி, பவ்னிந்தர் சிங்க்கு உத்தரவிட்டு, விசாரணையை, டிச., 22க்கு தள்ளிவைத்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X