சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மணலில் புதைந்திருந்த சடலத்தால் பரபரப்பு

Added : நவ 21, 2020
Share
Advertisement
திருவொற்றியூர் : கடற்கரை மணலில் புதைந்திருந்த சடலத்தால், பெரும் பரபரப்பு ஏற்பட்டது. சென்னை, திருவொற்றியூர், என்.டி.ஓ., குப்பம் கடற்கரையில், கற்கள் இடையே, மணலில் புதைந்த நிலையில், ஆண் சடலம் ஒன்று கிடப்பதாக, நேற்று மாலை, அங்கிருந்தவர்கள் திருவொற்றியூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், பெரும்பகுதி மணலில் புதைந்திருந்த சடலத்தை,

திருவொற்றியூர் : கடற்கரை மணலில் புதைந்திருந்த சடலத்தால், பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

சென்னை, திருவொற்றியூர், என்.டி.ஓ., குப்பம் கடற்கரையில், கற்கள் இடையே, மணலில் புதைந்த நிலையில், ஆண் சடலம் ஒன்று கிடப்பதாக, நேற்று மாலை, அங்கிருந்தவர்கள் திருவொற்றியூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், பெரும்பகுதி மணலில் புதைந்திருந்த சடலத்தை, ஆட்களை வரவழைத்து, மண்வெட்டியால், மணலை அப்புறப்படுத்தி மீட்டனர்.மணலில், உடலை துாக்க முடியாமல், ஆம்புலன்ஸ் ஊழியர்கள் சிரமப்பட்ட போது, திருவொற்றியூர் உதவி ஆய்வாளர் காதர் மீரா, தன் தோளில் சுமந்தபடி, சடலத்தை கரை கொண்டு வந்து சேர்த்தார்.

உடல் பிரேத பரிசோதனைக்காக, அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. முதற்கட்ட விசாரணையில், இறந்தவருக்கு, 45 வயது இருக்கும் என, தெரிய வந்தது. மணலில் புதைந்த நிலையில், சடலம் மீட்கப்பட்டிருப்பதால், கொலையா அல்லது கடலில் விழுந்து தற்கொலை செய்துக் கொண்டாரா என, போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X