அரசியல் செய்தி

தமிழ்நாடு

கூட்டணியை தலைமை முடிவு செய்யும்: பழனிசாமி

Added : நவ 21, 2020
Share
Advertisement
சென்னை;'கூட்டணியை கட்சி தலைமை முடிவு செய்யும். கட்சித் தலைமை அறிவிக்கும் வேட்பாளரை, வெற்றி பெற வைக்க, அனைவரும் பாடுபட வேண்டும். வெற்றியை உறுதி செய்ய, தீவிரமாக களப் பணியாற்ற வேண்டும்' என, முதல்வர் பழனிசாமி, கூறியுள்ளார். அ.தி.மு.க., மண்டல பொறுப்பாளர்கள், மாவட்ட செயலர்கள், அமைச்சர்கள் ஆலோசனைக் கூட்டம், நேற்று சென்னையில், கட்சித் தலைமை அலுவலகத்தில் நடந்தது. மாலை, 5:15 மணிக்கு

சென்னை;'கூட்டணியை கட்சி தலைமை முடிவு செய்யும். கட்சித் தலைமை அறிவிக்கும் வேட்பாளரை, வெற்றி பெற வைக்க, அனைவரும் பாடுபட வேண்டும். வெற்றியை உறுதி செய்ய, தீவிரமாக களப் பணியாற்ற வேண்டும்' என, முதல்வர் பழனிசாமி, கூறியுள்ளார்.

அ.தி.மு.க., மண்டல பொறுப்பாளர்கள், மாவட்ட செயலர்கள், அமைச்சர்கள் ஆலோசனைக் கூட்டம், நேற்று சென்னையில், கட்சித் தலைமை அலுவலகத்தில் நடந்தது. மாலை, 5:15 மணிக்கு துவங்கிய கூட்டம், 6:45க்கு நிறைவடைந்தது. வரவேற்புகூட்டத்திற்கு வந்த, முதல்வர் இ.பி.எஸ்., துணை முதல்வர் பன்னீர்செல்வம் ஆகியோருக்கு, வழிநெடுகிலும் கட்சியினர் திரண்டு நின்று, மேளதாளங்கள் ஒலிக்க வரவேற்பு அளித்தனர்.

கூட்டத்தில், முதல்வர் பேசியதாவது:கூட்டணிக் கட்சிகளை, கட்சித் தலைமை முடிவு செய்யும். அதேபோல, தலைமை அறிவிக்கும் வேட்பாளர்களை,அனைவரும் ஏற்க வேண்டும். 'சீட்' கிடைக்கவில்லை என, யாரும் கூறக்கூடாது. கட்சியில் கோஷ்டி பூசல் இருக்கக் கூடாது. கிளை நிர்வாகிகள் வருத்தப்படாத வகையில் செயல்படுங்கள்.லோக்சபா தேர்தலில், நாம் தோற்றதற்கு, கட்சி நிர்வாகிகள் அதிருப்தியில் இருந்ததே காரணம். அந்த நிலை, தற்போது ஏற்படக் கூடாது.

வாரம் ஒரு முறை கட்சியினரை சந்தியுங்கள்.இறப்பு, திருமணம் என, அனைத்து நிகழ்ச்சிகளிலும் பங்கேற்க வேண்டும். உங்களுக்கு தேவையானவற்றை, கட்சித் தலைமை செய்து தரும். நம் மீது மக்களிடம் அதிருப்தி இல்லை. எனவே, மூன்றாம் முறையாக, அ.தி.மு.க., ஆட்சியை பிடிக்கும். அதற்கு, அனைவரும் தீவிரமாக களப் பணியாற்ற வேண்டும்.

இடைத்தேர்தல் வெற்றி,லோக்சபா தேர்தல் தோல்வியால், துவண்டு போகும் கட்சி அல்ல என்பதை, அதன்பின் நடந்த இடைத்தேர்தல் வெற்றி வழியாக உணர்த்தி உள்ளோம். இடைத்தேர்தலில் பெற்றது போன்ற வெற்றியை, சட்டசபை பொதுத் தேர்தலிலும் உறுதி செய்ய வேண்டும். அதற்கு, அரசு செயல்படுத்தி உள்ள மக்கள் திட்டங்களை, பொது மக்களுக்கு எடுத்துரைக்க வேண்டும். திண்ணை பிரசாரம் நடத்த வேண்டும்.இவ்வாறு, முதல்வர் பேசியதாக, அ.தி.மு.க., வட்டாரங்கள் தெரிவித்தன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X