பொது செய்தி

தமிழ்நாடு

'ஆன்லைன் ரம்மி' தடை அவசர சட்டத்திற்கு ஒப்புதல்

Added : நவ 21, 2020
Share
Advertisement
சென்னை:'ஆன்லைன் ரம்மி' போன்ற, ஆன்லைன் விளையாட்டுகளை தடை செய்யும், தமிழக அரசின் அவசர சட்டத்திற்கு, கவர்னர் புரோஹித், ஒப்புதல் வழங்கி உள்ளார். 'ஆன்லைன் ரம்மி' போன்ற ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளில், பலரும் ஈடுபட்டு வருகின்றனர். பெரும்பாலானோர் பணத்தை இழந்து தவித்து வருகின்றனர். லட்சக்கணக்கில் பணத்தை இழந்தவர்கள், தற்கொலை செய்து கொள்ளும் அவலம் நடக்கிறது.இதைத் தடுக்க,

சென்னை:'ஆன்லைன் ரம்மி' போன்ற, ஆன்லைன் விளையாட்டுகளை தடை செய்யும், தமிழக அரசின் அவசர சட்டத்திற்கு, கவர்னர் புரோஹித், ஒப்புதல் வழங்கி உள்ளார்.

'ஆன்லைன் ரம்மி' போன்ற ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளில், பலரும் ஈடுபட்டு வருகின்றனர். பெரும்பாலானோர் பணத்தை இழந்து தவித்து வருகின்றனர். லட்சக்கணக்கில் பணத்தை இழந்தவர்கள், தற்கொலை செய்து கொள்ளும் அவலம் நடக்கிறது.இதைத் தடுக்க, தமிழக அரசு அவசர சட்டம் இயற்றி உள்ளது.

இந்த அவசர சட்டம், 1930ம் ஆண்டு தமிழ்நாடு சூதாட்ட சட்டம், 1888ம் ஆண்டு சென்னை நகரக்காவல் சட்டம், 1859ம் ஆண்டு தமிழ்நாடு மாவட்ட காவல் சட்டம் போன்றவற்றில் திருத்தச் செய்யப்பட்டு உருவாக்கப்பட்டுள்ளது. இந்த அவசர சட்டம், ஆன்லைன் விளையாட்டை நடத்துவோரையும், அதில் ஈடுபடுத்தப்படும் கணினிகள் மற்றும் அது தொடர்பான உபகரணங்களையும் தடை செய்யும்.

தடையை மீறி விளையாடுவோருக்கு, 5,000 ரூபாய் அபராதம், ஆறு மாத சிறை தண்டனை; ஆன்லைன் ரம்மி விளையாட்டு அரங்கம் வைத்திருப்போருக்கு, 10 ஆயிரம் ரூபாய் அபராதம், இரண்டு ஆண்டு சிறை தண்டனை வழங்கவும், சட்டத்தில் வழி வகை செய்யப்பட்டுள்ளது.

ஆன்லைன் விளையாட்டில், பணப்பரிமாற்றங்களை, இணைய வழியாக மேற்கொள்வதை தடுக்கவும், விளையாட்டை நடத்தும் நிறுவனங்களின் பொறுப்பாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும், தண்டிக்கவும், இந்த அவசர சட்டம் வழிவகுக்கிறது. இச்சட்டத்திற்கு, கவர்னர் பன்வாரிலால் புரோஹித், ஒப்புதல் வழங்கி உள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X