அரசியல் செய்தி

தமிழ்நாடு

தமிழகத்தில் பா.ஜ., ஆட்சி வானதி விருப்பம்

Added : நவ 21, 2020
Share
Advertisement
கோவை:''பா.ஜ.,வுக்கு இனி, தமிழகத்தில் முன்னேற்றம் மட்டும் தான்,'' என, அக்கட்சியின் தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன் கூறினார்.பா.ஜ., தேசிய மகளிர் அணி தலைவராக பொறுப்பேற்ற பின், நேற்று கோவை வந்த அவர், விமான நிலையத்தில் அளித்த பேட்டி:தமிழகத்தில் அரசியல் மாற்றம் ஏற்பட வேண்டும் என, பா.ஜ., தலைவர் முருகன், 'வெற்றி வேல் யாத்திரை' நடத்திக் கொண்டிருக்கிறார். தமிழகத்தில்,

கோவை:''பா.ஜ.,வுக்கு இனி, தமிழகத்தில் முன்னேற்றம் மட்டும் தான்,'' என, அக்கட்சியின் தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன் கூறினார்.

பா.ஜ., தேசிய மகளிர் அணி தலைவராக பொறுப்பேற்ற பின், நேற்று கோவை வந்த அவர், விமான நிலையத்தில் அளித்த பேட்டி:தமிழகத்தில் அரசியல் மாற்றம் ஏற்பட வேண்டும் என, பா.ஜ., தலைவர் முருகன், 'வெற்றி வேல் யாத்திரை' நடத்திக் கொண்டிருக்கிறார். தமிழகத்தில், பா.ஜ., ஆட்சி ஏற்படுவதையே மாற்றமாக பார்க்கிறோம்.

தற்போதுள்ள கூட்டணியில் எந்த மாற்றமும் கிடையாது; கூட்டணி வலுவாக இருக்கிறது. ஆனால், ஒவ்வொரு கட்சிக்கும், ஆட்சி அமைக்க வேண்டும் என்ற விருப்பம் உண்டு. அந்த விருப்பம், பா.ஜ.,வுக்கும் உண்டு. தொகுதி உடன்பாடு குறித்து, கட்சியின் தலைமை, தகுந்த நேரத்தில் அறிவிக்கும். பா.ஜ., வுக்கு இனி பின்னடைவு என்பது, தமிழகத்தில் கிடையாது; முன்னேற்றம் மட்டும் தான்.இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X