பொது செய்தி

தமிழ்நாடு

சீவல்சரகில் கழிவு மேலாண்மையில் அலட்சியம்

Added : நவ 21, 2020
Share
Advertisement
சின்னாளபட்டி : சீவல்சரகு ஊராட்சியில் ஊழியர்களே அலட்சியமாக ரோட்டோரத்தில் கழிவுகளை கொட்டுவதால் சுகாதாரக்கேடு ஏற்படுகிறது.கிராம ஊராட்சிகளில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தில் கழிவுகளில் மதிப்பு கூட்டு பொருட்கள், உயிர் உரம் தயாரித்து விற்கின்றனர். பெரும்பாலான இடங்களில் இத்திட்டத்தை செயல்படுத்துவதில் உள்ளாட்சி அமைப்புகளின் அலட்சியம் தொடர்கிறது. சீவல்சரகு ஊராட்சி

சின்னாளபட்டி : சீவல்சரகு ஊராட்சியில் ஊழியர்களே அலட்சியமாக ரோட்டோரத்தில் கழிவுகளை கொட்டுவதால் சுகாதாரக்கேடு ஏற்படுகிறது.

கிராம ஊராட்சிகளில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தில் கழிவுகளில் மதிப்பு கூட்டு பொருட்கள், உயிர் உரம் தயாரித்து விற்கின்றனர். பெரும்பாலான இடங்களில் இத்திட்டத்தை செயல்படுத்துவதில் உள்ளாட்சி அமைப்புகளின் அலட்சியம் தொடர்கிறது. சீவல்சரகு ஊராட்சி சார்பில் ஆத்துார் ரோட்டில் திடக்கழிவு மேலாண்மை திடல் உள்ளது. இருந்தும் பல குக்கிராமங்களில் கழிவுகளை சேகரிப்பதில் மெத்தனம் காட்டுகின்றனர். துாய்மை பணியாளர்ளே ரோட்டோரங்களில் குப்பையை கொட்டி தீயிட்டு எரிக்கின்றனர். இதனால் சுற்றுச்சூழல் மாசுபடும் நிலை உள்ளது.

எஸ்.ஜெயராஜ் (6வது வார்டு உறுப்பினர்): திண்டுக்கல்-குமுளி ரோடு, ஆத்துார் ரோட்டில் ஊழியர்களே கழிவுகளை கொட்டிச் செல்கின்றனர். இதை ஊராட்சி நிர்வாகம் கண்டுகொள்வதில்லை. அகற்றப்படாத கழிவுகளில் மழைநீர் தேங்கி டெங்கு பரவும் அபாயம் நிலவுகிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X