அரசியல் செய்தி

தமிழ்நாடு

பூரண கும்ப மரியாதையை ஏற்க மறுத்து உதயநிதி 'ஸ்டன்ட்'

Added : நவ 21, 2020
Share
Advertisement
திருச்சி:திருச்சி வந்த, தி.மு.க., இளைஞர் அணி செயலர் உதயநிதி, கயிலாசநாதர் கோவில் சார்பில் கொடுத்த பூரண கும்ப மரியாதையை ஏற்க மறுத்து விட்டார்.பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக, தி.மு.க., இளைஞர் அணி செயலர் உதயநிதி, நேற்று திருச்சி வந்தார். அவருக்கு, கரியமாணிக்கம் கைலாசநாதர் கோவில் சார்பில், பூரண கும்ப மரியாதை வழங்க, கட்சி நிர்வாகிகள் ஏற்பாடு செய்திருந்தனர். இதன்படி,

திருச்சி:திருச்சி வந்த, தி.மு.க., இளைஞர் அணி செயலர் உதயநிதி, கயிலாசநாதர் கோவில் சார்பில் கொடுத்த பூரண கும்ப மரியாதையை ஏற்க மறுத்து விட்டார்.

பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக, தி.மு.க., இளைஞர் அணி செயலர் உதயநிதி, நேற்று திருச்சி வந்தார். அவருக்கு, கரியமாணிக்கம் கைலாசநாதர் கோவில் சார்பில், பூரண கும்ப மரியாதை வழங்க, கட்சி நிர்வாகிகள் ஏற்பாடு செய்திருந்தனர். இதன்படி, உதயநிதி வந்த போது, கோவில் சிவாச்சாரியார்கள் பூரண கும்பம் மற்றும் பரிவட்டத்துடன் காத்திருந்தனர்.

ஆனால், உதயநிதி பரிவட்டம் கட்ட மறுப்பு தெரிவித்ததோடு, சிவாச்சாரியார்கள், தன் நெற்றியில் திருநீறு மற்றும் குங்குமம் வைக்கவும் அனுமதிக்கவில்லை. இந்த சம்பவம், நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்த தி.மு.க.,வினர் மட்டுமின்றி, பொதுமக்கள் மத்தியிலும் அதிருப்தியை ஏற்படுத்தியது.

உதயநிதி, நேற்று மதியம், திருவாரூர் மாவட்டத்துக்கு புறப்பட்டுச் சென்றார். 10க்கும் மேற்பட்ட கார்களில், தி.மு.க.,வினர் பின் தொடர்ந்து சென்றனர். திருவெறும்பூர் பஸ் ஸ்டாண்ட் அருகே, எஸ்.பி., செந்தில்குமார் தலைமையில் போலீசார், உதயநிதி காருக்கு பின்னால் சென்ற கார்களை தடுத்து நிறுத்தினர்.இதனால், தி.மு.க., வினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இருப்பினும், போலீசார் அனுமதிக்காததால், 10 நிமிடங்களுக்கு பின் புறப்பட்ட தி.மு.க., வினர், உதயநிதி காரை பின்தொடர முயன்றனர்.ஆனால், தஞ்சை மாவட்ட எல்லையான புதுக்குடியில், பாதுகாப்புக்கு நின்ற போலீசாரும், பேரணி போல் சென்ற தி.மு.க.,வினரின் கார்களை அனுமதிக்கவில்லை.உதயநிதி கார் சென்று, 15 நிமிடங்களுக்கு பிறகே, தி.மு.க.,வினரின் கார்களை போலீசார் விடுவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X