பொது செய்தி

தமிழ்நாடு

ஹிந்துஸ்தான் பெட்ரோலியத்தின்

Added : நவ 21, 2020
Share
Advertisement
சென்னை : வெளிநாட்டு இறக்குமதி வாகனங்களுக்கான, உயர்தர பெட்ரோலை, ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் முதல் முறையாக சென்னையில் அறிமுகம் செய்துள்ளது. பொதுத்துறையைச் சேர்ந்த ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் நிறுவனம், இறக்குமதியாகும் உயர்தர கார் மற்றும் பந்தயங்களில் பங்கேற்கும் இரு சக்கர வாகனத்திற்காக, 'பவர் - 99' என்ற பெயரில், உயர்தர பெட்ரோலை அறிமுகம் செய்துள்ளது. சென்னையில், உயர்ரக

சென்னை : வெளிநாட்டு இறக்குமதி வாகனங்களுக்கான, உயர்தர பெட்ரோலை, ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் முதல் முறையாக சென்னையில் அறிமுகம் செய்துள்ளது.

பொதுத்துறையைச் சேர்ந்த ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் நிறுவனம், இறக்குமதியாகும் உயர்தர கார் மற்றும் பந்தயங்களில் பங்கேற்கும் இரு சக்கர வாகனத்திற்காக, 'பவர் - 99' என்ற பெயரில், உயர்தர பெட்ரோலை அறிமுகம் செய்துள்ளது. சென்னையில், உயர்ரக பெட்ரோலை அறிமுகம் செய்த, அமைச்சர் சம்பத் பேசியதாவது:ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் , முதல் முறையாக சென்னையில், குறைந்த காற்று மாசு; வாகன இன்ஜின் களுக்கு கூடுதல் பாதுகாப்பு அளிக்கும் வகையில், 'பவர் - 99' என்ற, உயர்தர பெட்ரோலை அறிமுகம் செய்துள்ளது.

தற்போது, அந்த பெட்ரோலை, சென்னையில் அறிமுகம் செய்திருப்பது பொருத்தமான நிகழ்வு. இந்திய வாகன சந்தையில், வெளிநாட்டு வாகனங்கள் இறக்குமதி செய்யப்படுவதால், உயர்ரக பெட்ரோலுக்கு தேவை ஏற்பட்டுள்ளது.ஊரடங்கு காலத்திலும், முதலீடுகளை ஈர்த்த மாநிலம் தமிழகம். ஊரடங்கு காலத்தில், 55 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் வாயிலாக, 40 ஆயிரத்து, 719 கோடி ரூபாய் முதலீடு பெறப்பட்டுள்ளது. இதன் வாயிலாக, 74 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது.இவ்வாறு, அவர் பேசினார்.

நிகழ்ச்சியில், ஹிந்துஸ்தான் நிறுவனத்தின் தென் மண்டல விற்பனை பிரிவு தலைமை பொது மேலாளர் சந்தீப் மேஹஸ்வரி, துணை பொது மேலாளர் பாலாஜி ஆனந்தன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.ஒரு லிட்டர் உயர்தரபெட்ரோல் விலை, 106.83 ரூபாய். இது, தேனாம்பேட்டை மற்றும் மீனம்பாக்கத்தில் உள்ள, ஹிந்துஸ்தான் பெட்ரோல், 'பங்க்'களில் கிடைக்கும். படிப்படியாக மற்ற நகரங்களுக்கும் அறிமுகம் செய்யப்படும் என, ஹிந்துஸ்தான் பெட்ரோலிய நிறுவனம் அறிவித்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X