பொது செய்தி

தமிழ்நாடு

அப்பல்லோவில் கொரோனா காலத்தில்

Added : நவ 21, 2020
Share
Advertisement
சென்னை : அப்பல்லோ மருத்துவமனையில், கொரோனா காலத்தில், 250 பக்கவாத நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து, மறுவாழ்வு அளிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, அப்பல்லோ மருத்துவமனையின் நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் ரூபேஷ்குமார் கூறியதாவது:கொரோனா காலத்தில், அப்பல்லோ மருத்துவமனையில், 20 வயது முதல், 80 வயதுக்கு உட்பட்ட, 250க்கும் மேற்பட்ட பக்கவாத நோயாளிகளுக்கு சிகிச்சை வழங்கப்பட்டு

சென்னை : அப்பல்லோ மருத்துவமனையில், கொரோனா காலத்தில், 250 பக்கவாத நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து, மறுவாழ்வு அளிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, அப்பல்லோ மருத்துவமனையின் நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் ரூபேஷ்குமார் கூறியதாவது:கொரோனா காலத்தில், அப்பல்லோ மருத்துவமனையில், 20 வயது முதல், 80 வயதுக்கு உட்பட்ட, 250க்கும் மேற்பட்ட பக்கவாத நோயாளிகளுக்கு சிகிச்சை வழங்கப்பட்டு உள்ளது. இதில், பெரும்பாலும் மூளையில் அறுவை சிகிச்சை செய்வது சவாலானது. இதுபோன்ற சிக்கலான அறுவை சிகிச்சைகள், ஒரு சில மருத்துவமனைகளில் மட்டுமே செய்யப்படுகிறது. அப்பல்லோ மருத்துவமனையில் உள்ள உட்கட்டமைப்பு காரணமாக, பலரை காப்பாற்ற முடிகிறது.இவ்வாறு, அவர் கூறினார்.

நரம்பியல் சிகிச்சை நிபுணர் கார்த்தி கேயன் கூறியதாவது:கொரோனா தொற்று பாதிப்பால், பணி செய்யும் இளைஞர்களின் மன அழுத்தம் அதிகரித்தது. வேலை செய்யக்கூடிய பெண்கள், வீடு மற்றும் அலுவலக பணிகள் என, இரண்டையும் நிர்வகிக்க வேண்டிய சிக்கல் அதிகரித்ததன் காரணமாக, மன அழுத்தம் அதிகரித்து உள்ளது.மேலும், துரித உணவு கள், புகைபிடித்தல், மரு அருந்துதல் போன்ற வற்றின் காரணமாக, இளைஞர்களும் பக்கவாதத்தால் பாதிக்கப்படுவது அதிகரித்துள்ளது.இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X