பொது செய்தி

தமிழ்நாடு

வீரர் குடும்பத்திற்குஅரசு பணி: முதல்வர்

Added : நவ 21, 2020
Share
Advertisement
சென்னை:ஜம்மு காஷ்மீர், லடாக் பகுதியில், சாலை விபத்தில் இறந்த, தமிழக வீரர் குடும்பத்தில் ஒருவருக்கு, அரசு பணி வழங்க, முதல்வர் பழனிசாமி., உத்தரவிட்டுள்ளார்.துாத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி தாலுா, தெற்கு திட்டங்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் கருப்பசாமி, 34. ஜம்மு காஷ்மீர், லடாக் பகுதியில், இந்திய ராணுவத்தின் ஆர்ட்டிலெரி படைப்பிரிவில், நாயக் ஆக பணியாற்றி வந்தார்.கடந்த,

சென்னை:ஜம்மு காஷ்மீர், லடாக் பகுதியில், சாலை விபத்தில் இறந்த, தமிழக வீரர் குடும்பத்தில் ஒருவருக்கு, அரசு பணி வழங்க, முதல்வர் பழனிசாமி., உத்தரவிட்டுள்ளார்.

துாத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி தாலுா, தெற்கு திட்டங்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் கருப்பசாமி, 34. ஜம்மு காஷ்மீர், லடாக் பகுதியில், இந்திய ராணுவத்தின் ஆர்ட்டிலெரி படைப்பிரிவில், நாயக் ஆக பணியாற்றி வந்தார்.கடந்த, 18ம் தேதி, அங்கு நடந்த சாலை விபத்தில் இறந்தார். இதையறிந்த முதல்வர், அவரது குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். அவரது குடும்பத்தில் ஒருவருக்கு, அரசுப் பணி வழங்கவும் உத்தரவிட்டுள்ளார்.

கருப்பசாமிக்கு, மனைவி தமயந்தி, 7 - 5 வயதில் இரு மகள்கள், 1 வயதில் மகன் உள்ளனர். செய்தித் துறை அமைச்சர் ராஜு, துாத்துக்குடி எம்.பி., கனிமொழி, கலெக்டர் செந்தில்ராஜ் ஆகியோர், கருப்பசாமி படத்துக்கு அஞ்சலி செலுத்தி, குடும்பத்துக்கு ஆறுதல் கூறினர். அமைச்சர் ராஜு, 5 லட்சம், கனிமொழி, 2 லட்சம் ரூபாய் நிதி வழங்கினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X