பொது செய்தி

தமிழ்நாடு

பள்ளி செல்லா குழந்தைகள் இன்று முதல் கணக்கெடுப்பு

Added : நவ 21, 2020
Share
Advertisement
சென்னை : சென்னை மாவட்டத்தில், பள்ளி செல்லா, இடைநின்ற மாணவர்களை கணக்கெடுக்கும் பணி, இன்று முதல் துவங்குகிறது. சென்னை மாவட்டம் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி சார்பில், பள்ளி செல்லா குழந்தைகள் குறித்த சிறப்பு கணக்கெடுப்பு பணி, இன்று துவங்கி, டிச., 10ம் தேதி வரை நடக்கிறது. அத்துடன், இடைநின்ற மாணவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளி குழந்தைகள் கணக்கெடுப்பு பணியும்

சென்னை : சென்னை மாவட்டத்தில், பள்ளி செல்லா, இடைநின்ற மாணவர்களை கணக்கெடுக்கும் பணி, இன்று முதல் துவங்குகிறது.

சென்னை மாவட்டம் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி சார்பில், பள்ளி செல்லா குழந்தைகள் குறித்த சிறப்பு கணக்கெடுப்பு பணி, இன்று துவங்கி, டிச., 10ம் தேதி வரை நடக்கிறது. அத்துடன், இடைநின்ற மாணவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளி குழந்தைகள் கணக்கெடுப்பு பணியும் நடக்கிறது.இப்பணியில், அனைத்து ஆசிரியர் பயிற்றுனர்கள் மற்றும் சிறப்பு ஆசிரியர்கள், அங்கன்வாடி பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.கொரோனா தடுப்பு நடவடிக்கையை பின்பற்றி, குடியிருப்பு வாரியாக சென்று கணக்கெடுப்பு நடக்க உள்ளது.

குறிப்பாக, மார்க்கெட், ரயில் நிலையம், பஸ் நிறுத்தம் உள்ளிட்ட இடங்களில், குழந்தைகள் பாதுகாப்பு, தொழிலாளர் துறைகளுடன் இணைந்து, கணக்கெடுப்பு நடத்தப்படும்.இதில், 6 முதல், 18 வயது வரையுள்ள, பள்ளி செல்லா மற்றும் இடைநின்ற குழந்தைகள் கண்டறியப்பட உள்ளனர்.கண்டறியப்படும் குழந்தைகள், இலவச கட்டாய கல்வி சட்டத்தில், பள்ளிகளில் சேர்க்கப்படுவர். அதேபோல், மாற்றுத்திறனாளி குழந்தைகள், சிறப்பு பள்ளி, உண்டு உறைவிட மையங்களிலும் சேர்த்து, முறையாக பயிற்சி அளிக்கப்படும்.மேலும் விபரங்களுக்கு, 97888 58382, 97888 58507 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம் என, மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X