பொது செய்தி

தமிழ்நாடு

செய்திகள் சில வரிகளில்...

Added : நவ 21, 2020
Share
Advertisement
கந்தசஷ்டி விழாசின்னாளபட்டி: கந்த சஷ்டியையொட்டி சதுர்முக முருகன் கோயிலில் முருகன், வள்ளி, தெய்வானைக்கு சிறப்பு அபிேஷகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது. இதே போல், கன்னிவாடி தோணிமலை முருகன் கோயில், தருமத்துப்பட்டி சுப்பிரமணிசுவாமி கோயில், கசவனம்பட்டி மவுனகுரு சுவாமி கோயில், காரமடை ராமலிங்கசுவாமி கோயிலில் சிறப்பு பூஜைகள் நடந்தது.உலக கழிவறை தினம்சின்னாளபட்டி:

கந்தசஷ்டி விழா

சின்னாளபட்டி: கந்த சஷ்டியையொட்டி சதுர்முக முருகன் கோயிலில் முருகன், வள்ளி, தெய்வானைக்கு சிறப்பு அபிேஷகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது. இதே போல், கன்னிவாடி தோணிமலை முருகன் கோயில், தருமத்துப்பட்டி சுப்பிரமணிசுவாமி கோயில், கசவனம்பட்டி மவுனகுரு சுவாமி கோயில், காரமடை ராமலிங்கசுவாமி கோயிலில் சிறப்பு பூஜைகள் நடந்தது.

உலக கழிவறை தினம்

சின்னாளபட்டி: பேரூராட்சி சார்பில் நடந்த உலக கழிவறை தின விழாவில் செயல் அலுவலர் கலையரசி தலைமை வகித்தார். எஸ்.ஐ., பரமேஸ்வரன் முன்னிலை வகித்தார். இதில் திறந்தவெளி கழிப்பறை முறையை முற்றிலும் தவிர்த்தல், வீடுகள் தோறும் தனிநபர் கழிவறையின் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

ஐயப்ப பக்தர் பலி

வடமதுரை: திண்டுக்கல் திருச்சி நான்கு வழிச்சாலையில் நேற்று அதிகாலை ஐயப்ப பக்தர் ஒருவர் அடையாளம் தெரியாத வாகனம் மோதி இறந்தார். பெயர், ஊர் தெரியாத நிலையில் இவரது படம், விபத்து விபரம் சமூக வலைதளங்களில் வடமதுரை போலீசார் மூலம் பகிரப்பட்டது. இறந்தவர், திண்டுக்கல் ஒய்.எம்.ஆர்., பட்டி மாசானம் மகன் ராஜ் 30 என தெரிந்தது.

பஸ் டிரைவர் கைது

செம்பட்டி: புதுக்கோடாங்கிபட்டி அருகே திண்டுக்கல்லில் இருந்து தேனிக்கு சமையல் பணிக்கு சென்றவர்களின் வேனும், ஆத்துாரில் இருந்து திண்டுக்கல் சென்ற தனியார் பஸ்சும் மோதியது. இதில் 2 பேர் உயிரிழந்தனர். எட்டு பேர் காயமடைந்தனர். தப்பி ஓடிய பஸ் டிரைவரை போலீசார் தேடினர். நேற்று செம்பட்டியை சேர்ந்த டிரைவர் வடிவேலுவை 32, கைது செய்தனர்.

கற்பிக்க பயிற்சி முகாம்

நத்தம்: துரைக்கலம் அரசு மேல்நிலைப்பள்ளியில் 'கற்போம்,எழுதுவோம்' திட்டத்தில் தன்னார்வலர்களுக்கு பயிற்சி முகாம் நடந்தது. தலைமை ஆசிரியர் திருநாவுக்கரசு தலைமை வகித்தார். வட்டார கல்வி அலுவலர் நல்லுச்சமி, ஒருங்கிணைப்பாளர்கள் கிளாரா கிளமென்ஸ், ராஜ்குமார் முன்னிலை வகித்தனர். இதில் நாடகம், கிராமிய கதைகள், பாடல்கள், நகைச்சுவை, அதன் முக்கியத்துவம் குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.

மலைப்பகுதியில் கந்தசஷ்டி

கொடைக்கானல்: கந்த சஷ்டி விழாவை முன்னிட்டு பூம்பாறை குழந்தை வேலப்பர், குறிஞ்சியாண்டவர், தாண்டிக்குடி பாலமுருகன் கோயில்களில் சுவாமிக்கு சிறப்பு அபிேஷகம், அலங்காரம், தீபாராதனை நடந்தது. ஏராளமானோர் சாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

விழிப்புணர்வு முகாம்

நத்தம்: பேரூராட்சி சார்பில் நடந்த உலக கழிப்பறை தின விழாவில் செயல் அலுவலர் சரவணகுமார் தலைமை வகித்தார். தலைமை எழுத்தர் பிரசாத் முன்னிலை வகித்தார். இதில், கழிப்பறையை பயன்படுத்துவதன் அவசியம், பயன்படுத்தும் முறை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். துாய்மை ஆய்வாளர் சடகோபி, இளநிலை உதவியாளர் அழகர்சாமி பங்கேற்றனர்.

ஓட்டுநர் தற்கொலை

பழநி: பயணியர் விடுதியில் வாடகைக்கு ஓட்டுனராக ஆயக்குடி வந்த கும்பகோணத்தை சேர்ந்த மணிகண்டன் 37, தங்கினார். இவர் நேற்றிரவு குளியலறையில் துாக்கு போட்டு தற்கொலை செய்தார். பழநி போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X