சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கள்ளச்சாவி போட்டு ரூ.3 லட்சம் திருட்டு

Added : நவ 21, 2020
Share
Advertisement
ராயபுரம் : கூரியர் நிறுவனத்தில், கள்ளச்சாவி போட்டு, ௩ லட்சம் ரூபாய் திருடிய நபரை, போலீசார் தேடி வருகின்றனர். சென்னை, ராயபுரம், ஆதாம் தெருவில், 'அமேசான், பிலிப்காட்' உள்ளிட்ட நிறுவனங்களின் பொருட்களை இருப்பு வைத்து, டெலிவரி செய்யும் கூரியர் நிறுவனம் உள்ளது. இதன் மேலாளராக கதிரவன் என்பவர் பணியாற்றி வருகிறார். நேற்று முன்தினம் இரவு, நிறுவனத்தை பூட்டி விட்டு சென்றவர்,

ராயபுரம் : கூரியர் நிறுவனத்தில், கள்ளச்சாவி போட்டு, ௩ லட்சம் ரூபாய் திருடிய நபரை, போலீசார் தேடி வருகின்றனர்.

சென்னை, ராயபுரம், ஆதாம் தெருவில், 'அமேசான், பிலிப்காட்' உள்ளிட்ட நிறுவனங்களின் பொருட்களை இருப்பு வைத்து, டெலிவரி செய்யும் கூரியர் நிறுவனம் உள்ளது. இதன் மேலாளராக கதிரவன் என்பவர் பணியாற்றி வருகிறார். நேற்று முன்தினம் இரவு, நிறுவனத்தை பூட்டி விட்டு சென்றவர், நேற்று காலை வந்து திறந்து பார்த்த போது, பீரோவில் கள்ளச்சாவி போட்டு, உள்ளே இருந்த, ௩ லட்சம் ரூபாய் திருடு போயிருந்தது தெரியவந்தது. அதிர்ச்சியடைந்த மேலாளர், ராயபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

போலீசார், கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்த போது, மர்ம நபர் ஒருவர், சர்வ சாதாரணமாக வந்து, பூட்டை உடைக்காமல், பீரோவில் கள்ளச்சாவி போட்டு, பணத்தை திருடி சென்றது தெரியவந்தது.நன்கு தெரிந்தவர்களே திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டிருக்கலாம் என, சந்தேகிக்கும் போலீசார், ஊழியர்களை விசாரித்து வருகின்றனர். இச்சம்பவம், அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X