பொது செய்தி

தமிழ்நாடு

சென்னை முழுதும் மெட்ரோ ரயில் ஓடும்

Added : நவ 21, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement
2ம் கட்ட திட்டத்திற்கு அமித் ஷா இன்று அடிக்கல்சென்னை பொது போக்குவரத்தில் புதிய மைல்கல்மூன்றாண்டுகளில் பணி முடிக்க இலக்கு நிர்ணயம்-- நமது நிருபர் --சென்னை மெட்ரோ ரயில், இரண்டாம் கட்ட திட்டத்திற்கு, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, இன்று அடிக்கல் நாட்டுகிறார். மூன்றாண்டுகளில் இந்த திட்டத்தை மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர, இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதனால்

2ம் கட்ட திட்டத்திற்கு அமித் ஷா இன்று அடிக்கல்

சென்னை பொது போக்குவரத்தில் புதிய மைல்கல்

மூன்றாண்டுகளில் பணி முடிக்க இலக்கு நிர்ணயம்

-- நமது நிருபர் --சென்னை மெட்ரோ ரயில், இரண்டாம் கட்ட திட்டத்திற்கு, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, இன்று அடிக்கல் நாட்டுகிறார். மூன்றாண்டுகளில் இந்த திட்டத்தை மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர, இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதனால் சென்னை வாசிகள் குஷியாகி உள்ளனர். இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம், சென்னைக்கான பொது போக்குவரத்து திட்டத்தில், புதிய மைல்கல்லாக பார்க்கப்படுகிறது.சென்னையில், பொது போக்குவரத்து வசதிகளை மேம்படுத்துவதற்காக, இரண்டு வழித்தடங்களில் மெட்ரோ ரயில் சேவை துவங்கியுள்ளது. ஆலந்துார் -- சென்னை சென்ட்ரல், விமான நிலையம் -- வண்ணாரப்பேட்டை இடையே தற்போது மெட்ரோ ரயில்கள் இயக்கப்படுகின்றன.இதில், ஒரு பகுதி சுரங்க முறையிலும், ஒரு பகுதி மேம்பால முறையிலும் அமைந்துள்ளது. இந்த முதல்கட்ட திட்டத்தின் நீட்சியாக, வண்ணாரப்பேட்டை -- விம்கோ நகர் வரையிலான ரயில் பாதை அமைக்கும் பணி, இறுதி கட்டத்தில் உள்ளது.கொரோனாவால் ஏற்பட்ட சிக்கல்களால், இப்பணி முடிவது தாமதமாகியுள்ளது. விரைவில், இந்த வழித்தடம் மக்கள் பயன்பாட்டுக்கு வந்துவிடும் என, எதிர்பார்க்கப்படுகிறது.தற்போது, ரயில்கள் இயக்கப்படும் இரண்டு வழித்தடத்திலும், மக்கள் ஆதரவு அதிகமாக உள்ளது. இதனால், மெட்ரோ ரயில் நிறுவனம், இரண்டாம் கட்டமாக, மூன்று முக்கிய வழித்தடங்களில், இச்சேவையை செயல்படுத்த முடிவு செய்தது.மூன்று வழித்தடங்கள்இதன்படி, மாதவரம் - சிறுசேரி சிப்காட், மாதவரம் - சோழிங்கநல்லுார், கலங்கரை விளக்கம் - - பூந்தமல்லி என, மூன்று வழித்தடங்களில், 119 கி.மீ., தொலைவுக்கு, இரண்டாம் கட்ட திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இதற்கு, முதலில், 80 ஆயிரம் கோடி ரூபாய் தேவை என, மதிப்பிடப்பட்டது. மத்திய அரசின் வழிகாட்டுதல் அடிப்படையில், திட்ட வடிவமைப்பில் சில மாறுதல்கள் செய்யப்பட்டதால், மதிப்பீடு, 69 ஆயிரம் கோடி ரூபாயாக குறைந்தது. இதில், ஒரு பகுதி நிதி, ஜப்பான் பன்னாட்டு கூட்டுறவு நிதி நிறுவனம் வாயிலாக பெறப்பட்டது.இன்னொரு பகுதி நிதி, ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கி வாயிலாக பெற, நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நிதி ஏற்பாடு அடிப்படையில், இத்திட்டம் இரண்டு கட்டங்களாக பிரித்து செயல்படுத்தப்படுகிறது.இதன்படி, மாதவரம் -- சிறுசேரி சிப்காட் இடையிலான, 46 கி.மீ., மாதவரம் -- சோழிங்கநல்லுார் திட்டத்தில் மாதவரம் -- கோயம்பேடு வரையிலான வழித்தடம் ஆகியவை முன்னுரிமை திட்டமாக பட்டியலிடப்பட்டுள்ளன. இந்த பணிகளை முதலில் துவக்க, அனைத்து ஏற்பாடுகளும் முடிக்கப்பட்டுள்ளன.பணிகள் தீவிரம்இந்த வழித்தடத்தில், கட்டுமான பணிகளை விரைந்து முடித்து, மூன்று ஆண்டுகளில் போக்குவரத்தை துவக்க, சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் இலக்கு நிர்ணயித்துள்ளது. இதற்கான நிலம் கையகப்படுத்தும் பணிகளில், மெட்ரோ ரயில் நிறுவனம் தீவிரம் காட்டி வருகிறது.இதில், கலங்கரை விளக்கம் -- பூந்தமல்லி, கோயம்பேடு -- சோழிங்கநல்லுார் வழித்தடங்களில், கட்டுமான பணிகளை துவக்க, மெட்ரோ ரயில் நிறுவனம் சுறுசுறுப்பாக களம் இறங்கியுள்ளது. நிலம் கையகப்படுத்துதல், கட்டுமான வடிவமைப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்ட பணிகள் முடிக்கப்பட்டால், வட சென்னையில் இருப்பவர்கள் தென் சென்னைக்கும், தென் சென்னையில் இருப்பவர்கள் வட சென்னைக்கும், போக்குவரத்து நெரிசல் இன்றி எளிதாக சென்று வர வாய்ப்பு ஏற்படும்.

மாதவரம், சிறுசேரி, பூந்தமல்லி ஆகிய இடங்களில், மெட்ரோ ரயில் நிர்வாகத்தின் புதிய பணிமனைகள் அமைய உள்ளன.இன்று அடிக்கல்சென்னையின் எந்த பகுதிக்கும், எளிதில் சென்று வரும் வகையில், மெட்ரோ ரயில் சேவை மக்கள் பயன்பாட்டுக்கு வந்துவிடும். இதில், புதிய முன்னேற்றமாக, இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம், தமிழக அரசின் திட்டமாக மாற்றப்பட்டுள்ளது.இதனால், நிர்வாக ரீதியான முடிவுகளை விரைந்து எடுத்து, திட்டத்தை மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர முடியும். இந்த பின்னணியில், இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்ட கட்டுமான பணிகளுக்கு, இன்று அடிக்கல் நாட்டப்படுகிறது.

சென்னையின் போக்குவரத்து உள்கட்டமைப்பு மேம்பாட்டில், இன்றைய நிகழ்வு மிக முக்கிய நாளாக கருதப்படும். அந்த அளவுக்கு மக்களிடம் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ramamurthy N - Chennai,இந்தியா
21-நவ-202014:02:12 IST Report Abuse
Ramamurthy N மெட்ரோ ரயில் ஓடும். ஆனால் வேளச்சேரி பரங்கிமலை இணைப்பு மட்டும் இன்னும் 10 ஆண்டுகளிலாவது நிறைவேறுமா? ஆமை வேகத்தில் நடைபெறுகிறது
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X