பொது செய்தி

தமிழ்நாடு

சோலார் இஸ்திரி வண்டி மாணவிக்கு விருது

Added : நவ 21, 2020
Share
Advertisement
திருவண்ணாமலை:நடமாடும் சோலார் இஸ்திரி வண்டியை கண்டு பிடித்த மாணவிக்கு, ஸ்வீடன் நாட்டின் விருது வழங்கப்பட்டுள்ளது.சுற்றுச்சூழல் பருவநிலை பிரச்னைக்கு தீர்வு காணும், 12 - 17 வயது மாணவர்களுக்கு, ஸ்வீடன் நாடு, 'மாணவர் பருவ நிலை' விருதை, ஆண்டுதோறும் வழங்குகிறது.இந்த ஆண்டுக்கான விருதை, திருவண்ணாமலை மாவட்டம், வேங்கிக்காலை சேர்ந்த எஸ்.கே.பி., வனிதா இண்டர்நேஷனல் பள்ளியை சேர்ந்த,

திருவண்ணாமலை:நடமாடும் சோலார் இஸ்திரி வண்டியை கண்டு பிடித்த மாணவிக்கு, ஸ்வீடன் நாட்டின் விருது வழங்கப்பட்டுள்ளது.

சுற்றுச்சூழல் பருவநிலை பிரச்னைக்கு தீர்வு காணும், 12 - 17 வயது மாணவர்களுக்கு, ஸ்வீடன் நாடு, 'மாணவர் பருவ நிலை' விருதை, ஆண்டுதோறும் வழங்குகிறது.இந்த ஆண்டுக்கான விருதை, திருவண்ணாமலை மாவட்டம், வேங்கிக்காலை சேர்ந்த எஸ்.கே.பி., வனிதா இண்டர்நேஷனல் பள்ளியை சேர்ந்த, ஒன்பதாம் வகுப்பு மாணவி வினிஷா, 14 பெற்றுள்ளார். மாணவியை, கலெக்டர் சந்தீப் நந்துாரி பாராட்டினார்.

மாணவி வினிஷா கூறியதாவது: சலவை தொழிலாளர்கள், இஸ்திரி செய்ய கரித் துண்டுகளை பயன்படுத்தி வருகின்றனர். பின், அவற்றின் கழிவை குப்பையில் போடுவதால், நிலம், நீர், காற்று மாசுபடுகின்றன. இவற்றை தடுக்க,நடமாடும் சோலார் இஸ்திரி வண்டி கண்டுபிடித்தேன்.

வண்டியில் பொருத்தப்பட்டுள்ள பேட்டரியில் சூரிய ஒளியை சேமித்து, இஸ்திரி பெட்டியை பயன்படுத்த முடியும். இதனால், கரித் துண்டுகள் வாங்க செலவிடும், 1,000 ரூபாய் வரை சேமிக்க முடியும். ஸ்வீடன் நாட்டின் துணை பிரதமர் இசபெல்லா லோ, காணொலி காட்சி மூலம், விருது, பட்டம், பதக்கம் மற்றும் இந்திய ரூபாய் மதிப்பில், 8.5 லட்சம் ரூபாய் வழங்கினார்.இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X