பொது செய்தி

தமிழ்நாடு

வரத்து குறைவால் விலை உயரும் தக்காளி

Added : நவ 21, 2020
Share
Advertisement
ஆண்டிபட்டி : வரத்து குறைவால் ஆண்டிபட்டி மார்க்கெட்டில் தக்காளி விலை உயர்ந்து வருகிறது.ஆண்டிபட்டி பகுதியில் அணைக்கரைப்பட்டி, தர்மத்துப்பட்டி, மூணாண்டிபட்டி, புள்ளிமான்கோம்பை, அரப்படித்தேவன்பட்டி, குன்னுார், பாலக்கோம்பை, அழகாபுரி உட்பட பல கிராமங்களில் தக்காளி சாகுபடி உள்ளது. சில நாட்களாக பெய்த மழையில் தக்காளி விளைச்சல் பாதித்துள்ளது. இதனால் மார்க்கெட்டில் வரத்து

ஆண்டிபட்டி : வரத்து குறைவால் ஆண்டிபட்டி மார்க்கெட்டில் தக்காளி விலை உயர்ந்து வருகிறது.

ஆண்டிபட்டி பகுதியில் அணைக்கரைப்பட்டி, தர்மத்துப்பட்டி, மூணாண்டிபட்டி, புள்ளிமான்கோம்பை, அரப்படித்தேவன்பட்டி, குன்னுார், பாலக்கோம்பை, அழகாபுரி உட்பட பல கிராமங்களில் தக்காளி சாகுபடி உள்ளது. சில நாட்களாக பெய்த மழையில் தக்காளி விளைச்சல் பாதித்துள்ளது. இதனால் மார்க்கெட்டில் வரத்து குறைந்துள்ளது.

வியாபாரி முருகன் கூறியதாவது: ஆண்டிபட்டி மார்க்கெட்டிற்கு பல டன் அளவில் தக்காளி வரத்து இருக்கும். தற்போது மழையால் செடிகள் பாதித்து விளைச்சல் குறைந்துள்ளது. சில்லரை விற்பனையில் 10 நாட்களுக்கு முன் கிலோ ரூ.10 ஆக இருந்த தக்காளி, படிப்படியாக உயர்ந்து தற்போது கிலோ ரூ.30 ஆக உள்ளது, என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X